பாக்கிய லட்சுமி சீரியலில் பாக்கிய கோபியை எதிர்த்து அசத்தலாக பேசியுள்ளார்.
குடும்ப விளக்கு என்ற மலையாள சீரியலின் ரீமேக்தான் பாக்கிய லட்சுமி. விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்களில் இதுவும் ஒன்றும். மனைவிக்கு தெரியாமல் திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கும், கோபியின் ஆதிக்கம் தாங்க முடியாத நிலையில் எட்டியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து அவமானங்களையும், குடும்ப வன்முறையையும் சந்திக்கும் பாக்கியா கோபியை எதிர்த்து கேள்வி கேற்கிறார். உன்னோடு வாழ்வது பிடிக்கவில்லை என்று எல்லா ஆண்களும் கூறுகிறார்கள். இதை நானும் கேட்டிருக்கிறேன். இப்படி நான் கூறியிருந்தால், உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது. அப்படி எல்லா பெண்களும் கூற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் ஆனால் கூறமாட்டார்கள் அதுபோலத்தான் நானும் என்று அவர் கூறுகிறார். பாக்கியாவின் இந்த பதில் ஒட்டுமொத்த குடும்ப தலைவிகளின் மனம் ஓட்டமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.