Baakiyalakshmi Serial: மயூவை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாக்யா; காப்பாற்றப்படுவாரா ஈஸ்வரி?
ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு காரணம் ஈஸ்வரிதான் என்றும் ராதிகாவை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நீதிமன்றம் முடிவுக்கு வரும் நிலையில், பாக்யா, ராதிகாவின் மகள் மயூவை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்.
ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு காரணம் ஈஸ்வரிதான் என்றும் ராதிகாவை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நீதிமன்றம் முடிவுக்கு வரும் நிலையில், பாக்யா, ராதிகாவின் மகள் மயூவை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்.
Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு காரணம் ஈஸ்வரிதான் என்றும் ராதிகாவை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறி நீதிமன்றம் முடிவுக்கு வரும் நிலையில், பாக்யா, ராதிகாவின் மகள் மயூவை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். இதனால், பாக்கியலட்சுமி சீரியல் இந்த வார எபிசோடுகள் மீது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisment
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் பெரும்பாலான நேரம் சீரியல்களே ஒளிபரப்பாகி வருகின்றன. ஒரு காலத்தில் சீரியல் என்றால், இல்லத்தரசிகளே பார்ப்பார்கள் என்று இருந்த நிலையில், இன்றைக்கு ஆண்கள், பெண்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் சீரியல் பார்க்கிறார்கள்.
அதனால், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிடையே டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5, டாப் 10 இடங்களைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் குடும்பக் கதையான பாக்கியலட்சுமி சீரியல் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்கத் தவறியதே இல்லை.
Advertisment
Advertisements
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ வெளியாகி உள்ளது. இதில், மகன் கோபி அழைத்ததாலும் அவன் மீதான அன்பினாலும் கோபி மற்றும் அவனுடைய இரண்டாவது மனைவி ராதிகா வீட்டிற்கு சென்றார். ஆனால், அங்கே ஏதேச்சையாக ராதிகா கீழே விழுந்ததில் ராதிகா கர்ப்பம் கலைந்துவிடுகிறது. ஆனால், கோபியின் அம்மாதான் ராதிகாவைக் கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தார், ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்குதான் ஈஸ்வரிதான் காரணம் என்று ராதிகாவின் அம்மா கமலாவும் ராதிகாவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். ஈஸ்வரி கைது செய்யப்படுகிறார்.
ஈஸ்வரி மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது. ராதிகாவும், அவருடைய அம்மா கமலாவும் ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொல்கிறார்கள். ஈஸ்வரி ஆரம்பத்திலேயே ராதிகாவின் கர்ப்பத்தைக் கலைக்க கூறிவர் என்று ராதிகாவும், கமலாவும் கூறுகிறார்கள். கோபியும் நீதிமன்றத்தில் ஆமாம் என் அம்மாவுக்கு ராதிகா கர்ப்பமாக இருந்தது பிடிக்கவில்லை என்று கூறுகிறான். இதனால், ஈஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது. ஈஸ்வரியின் கணவர் ராமமூர்த்தியும் முதல் மருமகள் பாக்யாவும், அவளுடைய 2 மகன்கள், மருமகள்கள் எல்லோருமே இடிந்து போகிறார்கள்.
இதனால், பெற்ற பிள்ளையின் மீது கன்மூடித் தனமாக பாசம் வைத்ததைத் தவிர, எந்த தவறுமே செய்யாத ஈஸ்வரிக்கு சிறை தண்டனை கிடைக்கப்போகிறதா, அவரை யார்தான் இந்த வழக்கில் இருந்து காப்பாற்றப் போகிறார்கள் என்று பாக்கியலட்சுமி சீரியல் பார்வையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார எபிசோடுகளுக்கான புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜூலை 15- 20-ம் தேதி வரையிலான எபிசோடுகளுக்கு வெளியாகியுள்ள புரோமோவில், நீதிமன்றம் ஈஸ்வரியை குற்றவாளி என்று நிரூபணம் ஆனதாகக் கூறுகிறது. அப்போது, யோசிக்கும் பாக்யா, ஈஸ்வரிக்காக வாதாடும் வழக்கறிஞரிடம் சென்று ஏதோ பேசுகிறார். உடனடியாக, அந்த வழக்கறிஞர் அதற்கு முன்னதாக தனது தரப்பில் ஒரு சாட்சியை விசாரிக்க வேண்டும் என நிதிபதியிடம் அனுமதி கேட்கிறார்.
பாக்யா ராதிகாவின் மகள் மயூவை சந்தித்துப் பேசுகிறார். பழனிசாமி காரில் ராதிகாவின் மகள் மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். பாக்யா வெளியே சென்று மயூவை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு உள்ளே அழைத்து வருகிறார். மயூ மற்றும் பாக்யாவைப் பார்த்த ராதிகாவும் கமலாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். மயூ கோர்ட்டில் என்ன சாட்சி சொல்லப் போகிறாள். ஈஸ்வரி சிறை தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவாரா? என்று இந்த வார புரோமோ பாக்கியலட்சுமி சீரியலின் மீதுபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“