Advertisment

பாக்கியலட்சுமி வீட்டில் துயரம்: மாமனார் ராமமூர்த்தியின் இறுதித் தருணங்கள்; என்ன நடந்தது?

Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பாக்யாவின் மாமனார் கதாபாத்திரம் ராமமூர்த்தி இறந்துபோவதாக புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
baakiyalakshmi serial ramamoorthy

பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பாக்யாவின் மாமனார் கதாபாத்திரம் ராமமூர்த்தி இறந்துபோவதாக புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பாக்யாவின் மாமனார் கதாபாத்திரம் ராமமூர்த்தி இறந்துபோவதாக புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடன் டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. 

பாக்கியலட்சுமி சீரியலில், குடும்பமே உலகமாக வாழ்கிறாள் பாக்கியலட்சுமி. 2 திருமணமான மகன்கள், கல்லூரி படிக்கும் மகள், இருந்தாலும் தனது வாழ்க்கை, விருப்பமே முக்கியம் என்று பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் பாக்கியாவின் கணவர் கோபி. இரண்டாவது மனைவி ராதிகாவும் கோபியும் எத்தனை இடைஞ்சல் கொடுத்தாலும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்துக்கொண்டே இருக்கிறார் பாக்யா. அதே நேரத்தில், குடும்பத்தை தனி ஆளாக, சுமந்து வருகிறார். 

பாக்கியலட்சுமிக்கு கணவன், மாமியார் ஆதரவுதான் இல்லையே தவிர, ஆரம்பத்தில் இருந்தே மாமனார் ராமமூர்த்தியின் முழு ஆதரவு இருந்தது. அவர் எப்போதும் பாக்யாவை ஆதரித்து தனது மருமகளுக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில், தனது மகன் கோபியின் தவறான நடத்தைகளை கண்டித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் சில நாட்களாகவே ராமமூர்த்தி நான் செத்தால் கூட கோபி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று அடிக்கடி வசனம் பேசி வந்துள்ளார். இதனால், ராமமூர்த்திக்கு ஏதாவது ஆவது போல, கதையைக் கொண்டுபோகப் போகிறார்களோ என்ற யூகம் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் இருந்தது. 

இந்த நிலையில்தான், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி இறந்துவிடுவதுபோல, புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்யாவுக்கு ஆதரவாக இருந்த ராமமூர்த்தி கதாபாத்திரம், மிகவும் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தது. 

பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடைய பிறந்த நாளில் கோபி வந்ததற்கு கோபப்பட்ட ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் கோபி நான் செத்தாலும் கொள்ளி வைக்க கூடாது, அவன் எனக்கு மகனே கிடையாது. பாக்கியா தான் என்னுடைய பொண்ணு என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். ஆனால், பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 29 மற்றும் 31-ம் தேதி எபிசோடுகளுக்கான புரோமோவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராமமூர்த்தி படுக்கையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

ராமமூர்த்தி அன்று இரவு மருமகள் பாக்யாவிடம், பாக்யா நீ ரொம்ப நல்ல பொண்ணுமா, மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை நீ பாழக்கிக்காத, மனசு நிறைவா இருக்கா, அதான் என்னை அறியாமலேயே என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறேன், நல்லா இரும்மா என்று தனது மருமகளை இரு கைகளாலும் வாழ்த்திவிட்டு தூங்கச் செல்கிறார். மருநாள் படுக்கையிலேயே ராமமூர்த்தி இறந்து கிடக்கிறார். இது தெரியாமல், ஈஸ்வரி தனது கணவரை எழுப்புகிறார். அவர் எழுந்துகொள்ளாததால், அவருடைய குரலைக் கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் வந்து எழுப்புகிறார்கள். பிறகுதான், ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று தெரிந்துகொள்கிறார்கள். இதையடுத்து, பாக்கியலட்சுமி வீடே மீளாத்துயரில் மூழ்குகிறது. அனைவரும் கதறி அழுகிறார்கள்.  இப்படி, பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறுதித் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திர இறந்து போவதால் ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment