/tamil-ie/media/media_files/uploads/2021/07/Jen7.jpg)
Baakiyalakshmi Serial Bigg Boss Reshma replace Jenifer
Baakiyalakshmi Serial Bigg Boss Reshma replace Jenifer : எண்ணிடலடங்கா சின்னத்திரை சீரியல்கள் இருந்தாலும், மக்களின் வரவேற்பைப் பெற்றிருப்பது சில தொடர்கள் மட்டுமே. அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. குடும்பத் தலைவி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா பலரின் மனதை ஈர்க்க, அதே அளவு வரவேற்பைப் பெற்றிருக்கும் கதாபாத்திரம்தான் ராதிகா.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Jen8.png)
நற்குணம் உள்ள அப்பாவி பெண்ணான ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிஃபர் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் க்ரூப் டான்சராக அறிமுகமாகி, பின்னாளில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ஜெனி. அதனைத் தொடர்ந்து திருமணமாகி செட்டிலானவர், தற்போது 'அம்மன்' தொடரிலும், பாக்கியலட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார். இரண்டு சீரியல்களில் நடித்தாலும், அவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது என்னவோ பாக்கியலட்சுமி ராதிகா கதாபாத்திரம்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Resh.png)
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியிருக்கிறார் ஜெனிஃபர். சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ராதிகா கதாபாத்திரத்தில் பிக் பாஸ் போட்டியாளரான ரேஷ்மா பசுபலேட்டி தோன்றியிருக்கிறார். இதனால் குழப்பமடைந்த ஜெனிஃபரின் ரசிகர்கள், அதற்கான காரணம் கேட்டு, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமென்ட் செய்து வருகின்றனர். ஆனால், சரியான பதில் கிடைக்காத காரணத்தால் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றனர் ராதிகாவின் ரசிகர்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.