Advertisment

‘நானும் பெரிய வில்லிதான்...’ ஈஸ்வரிக்கு ஷாக் கொடுத்த கமலா; தலையை பிச்சிக்கொண்ட கோபி!

Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அம்மா ஈஸ்வரி, அங்கே அதிகாரம் செலுத்தி வந்த நிலையில், நானும் ஒன்றும் சளைத்தவல் இல்லை என்கிற விதமாக ராதிகாவின் அம்மா கமலா தனது வில்லத் தனத்தைக் காட்டுகிறார்.

author-image
WebDesk
New Update
Gopi x

பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அம்மா ஈஸ்வரியும் ராதிகாவின் அம்மா கமலாவும் சண்டை போட கோபி தலையை பிச்சிக்கொள்கிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் வீட்டுக்கு சென்றிருக்கும் கோபியின் அம்மா ஈஸ்வரி, அங்கே அதிகாரம் செலுத்தி வந்த நிலையில், நானும் ஒன்றும் சளைத்தவல் இல்லை என்கிற விதமாக ராதிகாவின் அம்மா கமலா தனது வில்லத் தனத்தைக் காட்ட இருவரும் சண்டை போட கோபி தலையை பிச்சிக்கொள்கிறார். 

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான திருப்பங்களை வைத்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. 

பாக்கியலட்சுமி சீரியலில், குடும்பத் தலைவி பாக்கியலட்சுமி என்கிற பாக்யா, 2 வளர்ந்த திருமணமான மகன்கள், கல்லூரி படிக்கும் ஒரு மகள். முதல் மகன் செழியனுகு மகள் பிறந்திருக்கிறாள் மாமனார் ராமமூர்த்தி, மாமியார் ஈஸ்வரி. கணவன் கோபி.

பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த பாக்யா, குடும்பமே உலகம் என்று வாழ்கிறாள். பிஸினஸ் செய்யும் கோபி, மனைவி பாக்யாவை மட்டம் தட்டுகிறான். ஆனாலும், பாக்யா தனக்கு இருக்கும் சமையல் கலைத் திறமையை வைத்து சொந்தமாக கேட்டரிங் பிஸினஸ் செய்து, குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாள்.  ஆனால், கோபி, கல்லூரி படித்தபோது காதலித்த ராதிகாவை (திருமணமாகி விவகாரத்து பெற்று பள்ளி படிக்கும் மகளுடன் தனியாக வசிக்கிறார்) திருமணம் செய்து கொள்கிறார். தனது மனைவி பாக்யாவை, பாக்யாவுக்கே தெரியாமல் விவாகரத்து செய்கிறான்.

பாக்யா, மகன்கள், மாமியார், மாமனார் ஆகியோர் குடும்பமாக இருக்கும் வீட்டை, கோபி தன்னுடைய வீடு என்று உரிமை கொண்டாட, பாக்யா 18 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடுகிறாள். அந்த வீட்டை குடும்பத்தினர் பாக்யா மீது எழுதி ரிஜிஸ்டர் செய்கிறார்கள். 

கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் இருந்து வந்த நிலையில், கோபிக்கு திடீரென உடல் நிலை சரியில்லமால் போக, உடல்நிலையை காரணம் காட்டி, கோபியின் அம்மா ஈஸ்வரி, தனது மகன் கோபியை அவனது 2வது மனைவி ராதிகாவுடன் பாக்யா வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைக்கிறார். கோபி செய்யும் தவறுகள் எல்லாம் அவனுடைய அம்மா ஈஸவரிக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஈஸ்வரிக்கு பெத்த பாசம் கண்ணை மறைக்கிறது.

Gopi

இந்த நிலையில்தான், கோபியின் 2வது மனைவி ராதிகா கர்ப்பமடைகிறார். பேரன், பேத்தி எடுத்த வயதில் மீண்டும் அப்பாவாகப் போகும் கோபியால் தங்களுக்கு அவனமானம் என்று மகன்கல் செழியன், எழில், மாமனார் ராமமூர்த்தி, பாக்யா குடும்பமாக சேர்ந்து கோபியை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். ஆனால், கோபி, அவனுடைய அம்மா ஈஸ்வரியிடம் நன்றாக நடித்து, தாய் பாசத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஈஸ்வரியை அவனுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

பாக்யா வீட்டில் இருந்தபோது ஈஸ்வரி தனது மூத்த மருமகள் பாக்யாவை அதிகாரம் செலுத்தி வந்தார். பாக்யாவும் தனது கடமை என்று மாமியார் ஈஸ்வரிக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்தார். 

ஆனால், ஈஸ்வரி, மகனுடன் சேர்ந்து ராதிகா வீட்டுக்கு வந்து, இங்கேயும் அதிகாரம் செலுத்துகிறார்.  ஏற்கெனவே, கோபியின் அம்மா ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மா கமலாவுக்கும் முன்பு நடந்த சண்டையால், இப்போது வீட்டை விட்டு விரட்டுகிறேன் பார் என்று சதி திட்டம் போடுகிறார்கள். 

ராதிகாவின் வீட்டில் மகன் கோயுடன் இருக்கும் இருக்கும் ஈஸ்வரி, 2வது மருமகள் ராதிகாவையும் ராதிகாவின் அம்மா கமலாவை அதிகாரம் செலுத்தி தனக்கு பணிவிடை செய்ய வைக்கிறார். 

இந்த நிலையில்தான், ராதிகாவின் அம்மா கமலா, உனக்கு மட்டும்தான் வில்லத்தனம் தெரியும் எனக்கு தெரியாதா என்ன, நானும் பெரிய வில்லிதான் ஈஸ்வரியிடம் என்று வில்லத்தனத்தைக் காட்டி ஷாக் கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ, ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஹாலில் அமர்ந்திருக்கும் கோபியின் அம்மா ஈஸ்வரி அமர்ந்திருக்கிறார். அவருக்கு  ராதிகாவின் அம்மா கமலா காபி எடுத்துக்கொண்டு போய் தருகிறார். அதைக் குடித்துப் பார்க்கும் ஈஸ்வரி,  “காபி நல்லாவே இல்லை” என்று கூறி காபி கப்பை கமலாவிடம் திருப்பி தருகிறார். ஆனால், கமலா, காபி கப்பை வீசி கீழே ஊற்றிவிட்டு, ‘கோபியின் அம்மா ஈஸ்வரி காபி நல்லா இல்லை என்று காபியைக் கீழே ஊற்றிவிட்டார்’ என்று கூறி தனது வில்லத் தனத்தைக் காட்டுகிறார். இதைப் பார்த்து ஈஸ்வரி ஷாக் ஆகிறார். ராதிகாவும் காபி, ஈஸ்வரியை ஏன் என்று கேள்வி கேட்கிறார். இந்த பஞ்சாயத்து கோபியிடம் போகிறது. ஈஸ்வரியும் கமலாவும் சண்டை போடுகிறார்கள். கோபி அம்மா பக்கம் பேசுவதா, மாமியார் பக்கம் பேசுவதா என்று தெரியாமல் இருவரின் சண்டையில் என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிச்சிக் கொள்கிறான். ராதிகாவின் அம்மா கமலா நானும் பெரிய வில்லிதான் என்று கெத்து காட்டுகிறார்.

இப்படி, முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு, 2வது திருமணம் செய்துகொண்ட கோபி அல்லல் படும், பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment