Advertisment

Vijay TV Serial: மருத்துவமனையில் ராதிகா கர்ப்பத்தை கன்ஃபார்ம் செய்த டாக்டர்; 'தாத்தா' கோபி திருட்டு முழி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் 2-வது மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பதை டாக்டர் கன்ஃபார்ம் செய்கிறார். இதையடுத்து, பேரன் பேத்தி எடுத்த வயதில் மீண்டும் அப்பாவாகும் கோபி திருட்டு முழி முழிக்கும் எபிசோடு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் 2-வது மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பதை டாக்டர் கன்ஃபார்ம் செய்கிறார். இதையடுத்து, பேரன் பேத்தி எடுத்த வயதில் மீண்டும் அப்பாவாகும் கோபி திருட்டு முழி முழிக்கும் எபிசோடு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கலக்கி வருகிறது. குடும்பமே உலகம் என்று இருக்கும் பாக்கியலட்சுமி, திருமணமான 2 மகன்கள், 1 மகள் இருக்கிறார்கள். பாக்யாவின் கணவர் கோபி, பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த பாக்யாவை அவளுக்கே தெரியாமல் விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி படிக்கும்போது காதலித்த ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். பாக்யாவின் தோழிதான் இந்த ராதிகா. பாக்கியலட்சுமி சீரியலில், கோபி 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். இருந்தாலும்  கோபி - பாக்யா தம்பதியின் மூத்த மகன் செழியனுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். இவர்கள் குடும்பத்தில் புயல் அடித்து சில வாரங்களுக்கு முன்புதான் ஓய்ந்தது. 

தற்போது, பாக்யாவின் நண்பர் பழனிசாமி, பாக்யாவை விரும்புவதுபோல எபிசோடுகள் போய்க்கொண்டிருந்த நிலையில், கோபியின் 2-வது மனைவி ராதிகா கர்ப்பம் அடைந்திருப்பதாக டாக்டர் கன்ஃபார்ம் செய்கிறார். இதனால், பேரன் பேத்தி எடுத்த வயதில், கோபி 2-வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாக உள்ளதால் திருட்டு முழி முழிக்கிறார். இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment