Baakiyalakshmi Serial Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், இந்த வாரம் பழனிசாமி, பாக்யாவின் கிச்சன் வரை வந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த கோபி ஷாக் ஆகி என்ன பேசுவார்கள் என்று புலம்பும் புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்தான் டி.ஆர்.பி-யில் டாப்பில் இருந்து வருகிறது. வளர்ந்த மகன்கள், மகள் இருக்கும் வயதில் கோபி, மனைவி பாக்யாவை ஏமாற்றிவிட்டு, தான் கல்லூரி காலத்தில் காதலித்த பெண் ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். பாக்யா, மாமனார், மாமியார் மகன்கள் மருமகள், மகள் இருக்கும் வீட்டுக்கே ராதிகா, கோபியுடன் வந்து சேர்கிறார்.
கணவர் ஏமாற்றினாலும் தளராத பாக்யா குடும்பமே உலகமாக இருக்கிறார். கேட்டரிங் தொழில் மூலமாக சம்பாதித்து குடும்பத்தையே காப்பாற்றுகிறார். தொழிலில் நிலைத்து நிற்க, ஸ்போக்கன் இங்லீஷ் கிளாஸுக்குப் போன இடத்தில் பழனிசாமி என்ற வெள்ளந்தியான தொழிலதிபர் பாக்யாவுக்கு நண்பராகிறார்.
பழனிசாமி மற்றும் பாக்யா பேசுவதைப் பார்க்கும் கோபி அவ்வப்போது புகைச்சலில் கருகுவது உண்டு. அந்த வகையில், இந்த வாரம் பாக்கியலட்சுமி புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பாக்யாவின் விட்டுக்கு வரும் பழனிசாமி கிச்சனில் நாற்காலியில் அமர்ந்து பாக்யா செய்து தரும் உணவை சாப்பிட்டு பிரமாதமாக இருப்பதாகக் கூறுகிறார். பாக்யாவும் பழனிசாமியும் வெள்ளந்தி மனம் கொண்டவர்களாக நட்பாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பாக்யாவின் மாஜி கணவர் கோபி ஷாக் ஆகிறார். மேலும், இவர்கள் அடங்கவே மாட்டார்களா? என்ன பேசுவார்கள் இவர்கள் கேட்கவே மாட்டேங்குதே என்று புலம்புகிறார்.
கோபி புலம்பினாலே பாக்கியலட்சும் சீரியலின் பார்வையாளர்கள், உனக்கு இன்னும் நல்லா வேணும்டா கோபி என்று குஷி ஆகிவிடுவார்கள். அதனால், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் இந்த வாரம் எபிசோடுகளைப் பார்க்க இப்போதே எதிர்ப்பார்ப்புகளுடன் தயாராகிவிட்டார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“