விஜய் டிவியில் தற்போது பரபரப்பின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் சீரியலின் கதையும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி.
பெண் தனி மனித முன்னேற்றம், ஆணாதிக்கம், திருமணத்திற்கு மீறிய உறவு என பல முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தற்போது கோபி, பாக்யா டைவர்ஸ் ஆகிவிட்டது. தைரியமாக கோர்ட்டுக்கு வந்த பாக்யா கோபிக்கு டைவர்ஸ் வழங்குவதாக கூறியதால், வழக்கு சுமுகமாக முடிந்தது.
இதனைத் தொடர்ந்து கோபி ராதிகாவிடம் சென்று டைவர்ஸ் ஆன விஷயத்தை சொல்லி இனிமேல் நீ தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். மேலும் தன் வீட்டில் உள்ளவர்களிடம் பாக்யாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எல்லாரும் அவளை மறந்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இதனிடையே இந்த சீரியலில் கோபி வேடத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுளள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில், பாக்யாவுக்கும் கோபிக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது. பாக்யா சொன்ன மாதிரி திருமண வாழ்க்கையில் பிடிக்கவில்லை என வரும்போது சேர்ந்து வாழ முடியாது. இரண்டு பேருக்கும் இல்லை ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்றால் கூட சேர்ந்து வாழ முடியாது.
இந்த சீரியல் குறித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் சதீஷ் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கோபி கெட்டவன் இல்லை நிறைய பொய் சொல்லி இருக்கான். துரோகம் பண்ணி இருக்கான். ஆனால் அவன் நேராக எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என சொல்லி இருந்தால் சீரியல் ஆயிரம் எபிசோடு எல்லாம் போகாது.
பாக்யா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. பெண்கள் பாவம் பல வருடங்களாக ஆணாதிக்கத்தால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நான் சதீஷ் என்னுடைய ஓட்டு பாக்யாவுக்கு தான் என பேசி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil