Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா சண்டை போட்டுகொண்டு மயூவுடன் வீட்டை விட்டு கிளம்பி செல்லும்பொது, ஊரே கூடி நிற்க, போக வேண்டாம் என கோபி மனைவி ராதிகா காலில் விழுந்து கெஞ்சும் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைத்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்களில் சதீஷ், சுசித்ரா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்கிற பாக்யா 40-களின் இருக்கிறார். கணவன் கோபி, வளர்ந்த திருமணமான 2 மகன்கள். பள்ளி படிக்கும் மகள். மாமனார். மாமியார். பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவள். குடும்பமே உலகமாக இருக்கிறாள். ஆனால், கணவன் கோபி, படிக்காத பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி காலத்தில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறான். அவளுடன் எதிர்வீட்டில் குடிவருகிறான்.
இந்த தொடர் குடும்பத் தலைவி பாக்யா படிப்படியாக முன்னேறுகிறாள். பாக்யா வைராக்கியம், உழைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
கோபி ராதிகாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார். தன்னுடைய முன்னாள் மனைவி பாக்யாவின் அமைதியான குணத்தையும் அவள் எவ்வளவு அமைதியாக இருந்தால் என்பதை நினைத்து கோபி வாடி வருகிறான். அதுமட்டுமல்ல, தன்னுடன் இருந்த மகளும் அம்மாவுடன் சென்றுவிட, கோபி மது குடிக்கத் தொடங்குகிறார்.
மது குடித்துவிட்டு வரும் கோபி, தன்னுடைய மகள் இனியா தன்னைவிட்டு பிரிய, ராதிகா தான் காரணம் என்றும் தன்னுடைய நிம்மதி பறிபோனதற்கு அவர்தான் காரணம் என்றும் போதையில் உளறுகிறார். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய முதல் மனைவி பாக்கியா குறித்து புகழ்ந்து பேசுகிறார்.
இதனால் ராதிகா கோபம் அடைகிறார். இதையடுத்து ராதிகா, கோபியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவெடுக்கும் சூழ்நிலையை உருவாகிறது.
இதனிடையே குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்த கோபியை, பாக்யா அழைத்து வந்து ராதிகாவிடம் ஒப்படைக்கிறார். மேலும், கோபியை ஒழுங்காக பார்த்துக் கொள்ளும்படி அட்வைஸ் செய்வது, ராதிகாவிற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது.
கோபியும், ராதிகாவைத் திட்டுகிறார். இதனால் கோபம் அடைந்த ராதிகா, மறுநாள் காலை தன்னுடைய மகள் மயூவை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு செல்கிறார். ஆனால், கோபி, மனைவி ராதிகாவிடம் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என்று தடுத்து கெஞ்சுகிறார்.
இரவு என்ன நடந்தத், தான் என்ன செய்தேன், எப்படி வீட்டிற்கு வந்தேன் என எதுவுமே தெரியாமல் குழப்பம் அடையும் கோபி, ராதிகா வீட்டை விட்டு செல்வதால் அதிர்ச்சி அடைகிறார்.
ராதிகாவும் மயூவும் காரில் ஏறிப் புறப்பட முயற்சி செய்யும்போது, கோபி அவருடைய கையைப் பிடித்து, போக வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இவர் கெஞ்சும்போது அக்கம்பக்கத்தில் குடுயிருப்பவர்கள் எல்லோரும் திரண்டு விடுகிறார்கள். எதிர்வீட்டில் குடியிருக்கும் கோபியின் குடும்பத்தினரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஊரே கூடி நிற்க கோபி, ராதிகாவின் காலில் விழுந்து போக வேண்டாம் கெஞ்சுகிறார். ஆனால், ராதிகா தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்.
கோபி, தனது 2வது மனைவி ராதிகா காலில் அவர் விழுந்து கெஞ்சுவதை, தெருவே வேடிக்கை பார்க்கிறது. மேலும் அவருடைய அப்பா, அம்மா, இனியா, எழில், செழியன் என அவரது குடும்பத்தினரும் பார்த்து வருத்தப்படுகிறார்கள். கோபியின் அம்மா ஈஸ்வரி மகனின் நிலைமையைப் பார்த்து வருத்தப் படுகிறார். தனது அம்மா, குடும்பத்தினர் எல்லாரும் பார்ப்பதைப் பார்த்து, கோபி அவனமானப்படுகிறார். அன்பான மனைவி பாக்யாவை விட்டுவிட்டு, இப்படி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு காலில் விழுந்து கெஞ்சும் கோபியின் நிலையைப் பார்த்து, இதெல்லாம் உங்களுக்கு தேவையா கோபி என்று பார்வையாளர்கள் கோபியை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.