பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த கோபி தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்டு வெளியேறி ராதிகா வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
Advertisment
திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.
கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.
சமீபத்தில் கோபி ராதிகாவுடன் பழகி வரும் உண்மையை தெரிந்துகொண்ட பாக்யா, கோபியின் வீட்டை விட்டு வெளியேறி தனது ஆபீஸில் இருக்கிறார். அடுத்த சில எபிசோடுகளில், கோபியின் விருப்பப்படி பாக்யா விவாகரத்தும் கொடுத்து விடுகிறார். அதுவரை எப்போடா விவாகரத்து கிடைக்கும் என்று இருந்த கோபி, விவாகரத்துக்கு பின் பாக்யா தான் தப்பு செய்தது போல் பிம்பத்தை உருவாக்கிவிட்டார்.
Advertisment
Advertisements
அதேபோல் அவரது குடும்பத்தில் மருமகள் ஜெனி, மாமனார், ஆகியோர் பாக்யா பக்கம் பேசினாலும், மற்ற அனைவரும் கோபிக்கு ஆதரவாக பேசி,கோபி எந்த தப்பும் செய்யாதது போல் பாக்யா செய்தது அனைத்தும் தவறு என்பது போல் சொல்லிவிட்டனர். இதற்கெல்லாம் ஒன்றும் பேசாமல் இருந்த பாக்யா, வீட்டை விட்டு வெளியேற மருத்துவிட்டார்.
ஆனால் தான் 40 லட்சம் செலவு செய்த பணத்தை கேட்ட கோபியிடம் அந்த பணத்தை நானே தருகிறேன் என்று பாக்யா சொல்லிவிட அடுத்து கோபி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் வெளியில் சென்றவுடன், பாக்யாவின் மகன் செழியன் மகள் இனியா இருவரும் பாக்யாவிடம் கோபித்துக்கொள்கின்றனர். மாமியார் ஈஸ்வரி உட்பட.
இதனிடையே வெளியில் சென்ற கோபி தனது நண்பரை சந்தித்து பேச, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், கோபி நேராக ராதிகாவிடம் சென்று நான் உனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அதனால் தான் இப்போது நடுத்தெருவில் இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
அப்போது ராதிகாவின் அண்ணன் கோபியிடம் விசாரிக்க, குடும்பத்தில் பெரிய பிரச்சினை என்றும், வீட்டில் உள்ள அனைவரும் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து தன்னை வெளியேற்றிவிட்டாகவும், சொல்லி மீண்டும் ராதிகாவிடம் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் கோபி. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“