தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் பிரதான நிகழ்ச்சிகளாக இருப்பது சீரியல்கள்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சீரியல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று அந்த சீரியலின் கதை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதையில், பாக்யா மற்றும் அவருடைய நண்பர் பழனிசாமி விவகாரம் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நிலையில், பழனிசாமியின் அக்கா சுந்தரி பற்ற வைத்திருக்கிறார்.
பழனிச்சாமியின் அக்கா பாக்யாவை பழனிச்சாமிக்காக பெண் பார்க்கப் போவதாக கூறுவதை கேட்டு, பாக்யாவின் முன்னாள் கணவர் கோபி ஆத்திரமடைகிறார். உடனடியாக, பாக்யாவின் ரெஸ்டாரண்ட்டிற்கு சென்று பாக்யாவிடம் கேவலமாகப் பேசுகிறார். இதனால், கோபத்தின் உச்சிக்கே செல்லும் பாக்யா, இது குறித்து நேரடியாக பழனிச்சாமியிடம் கேட்க அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அங்கே பழனிச்சாமியின் அக்கா, அம்மா இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்நிலையில், பழனிச்சாமியின் அக்கா சுந்தரி, பாக்யாவிடம் நேரடியாகவே அவர்களது திருமணம் குறித்து பேசுவதாக இன்றைய எபிசோடு அமைந்தது.
பாக்யாவின் நண்பர் பழனிசாமி, நீண்ட நாட்களாக பாக்யாவை திருமணம் செய்யும் விருப்பத்துடன் இருக்கிறார். அவரது விருப்பத்தை அவரது அம்மாவும் அக்கா சுந்தரியும் பார்த்து புரிந்து கொள்கின்றனர். பழனிச்சாமி இதை மறுத்தாலும் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இருவரும் இதை தெரிந்து கொள்கிறார்கள்.
பழனிச்சாமியின் அம்மா, தன்னுடைய மகனுக்கு பாக்யா மிகவும் பொருத்தமானவர் என்பதில் உறுதியாக இருக்கிறார். சுந்தரியும் ஆதரவு தெரிவிக்கிறார்.
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடில், இனியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பழனிச்சாமி, அவருடைய அம்மா, அக்கா சுந்தரி மற்றும் அக்கா மகன் விமல் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
அப்போது வாசலில் வைத்து பழனிசாமியின் அக்கா மற்றும் அம்மா இருவரும் தேங்காய், பூ, பழம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இதைக் கேட்டு கோபி ஏன் என்று விசாரிக்கிறார்.
அதற்கு அவர்கள், பாக்யாவை பழனிச்சாமிக்கு பேசி முடிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக சுந்தரி கூறுகிறார். இதனால் மிகவும் அதிர்ச்சி அடையும் கோபி, மறுநாள் காலை பாக்யாவின் ரெஸ்டாரெண்ட்டிற்கு சென்று கேவலமாகப் பேசி கத்திக் கொந்தளிக்கிறார்.
“நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று பலவாறாக பாக்கியாவை திட்டுகிறார். இந்த வயதில் மணப்பெண்ணாக நிற்கப் போகிறாயா” என்று கண்டபடி பாக்யாவைக் கேட்கிறார். இதைக் கேட்டு கோபமடையும் பாக்யா பதிலுக்கு கோபியை திட்டுகிறார்.
இதைப் பார்க்கும், பார்வையாளர்கள், “டேய் கோபி நீ மட்டும் இந்த வயதில் மனைவியை ஏமாற்றி அவளை விவகாரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தாத்தா ஆகிவிட்ட பிறகு இரண்டாவது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பா ஆகலாம், ஆனால், ராதிகா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக் கூடாதா?” என்று மனதுக்குள் கோபத்துடன் கேட்பது தெரிகிறது.
பாக்யாவிடம் தொடர்ந்து பேசும் கோபி “நீ கெடுவதுடன் மட்டுமில்லாமல் இனியாவையும் பழனிச்சாமியின் அக்கா மகனுடன் கோர்த்து விடுகிறாயா, இதெல்லாம் உன்னுடைய திட்டம் தானா என்றும் கோபி அனைத்து விஷயங்களையும் பாக்யாவிடம் கேட்கிறார்.” இதனால் ஆத்திரமடையும் பாக்யா, கோபியை வெளியே செல்லுமாறு பாக்யா கத்துகிறார்.
இதையடுத்து பாக்யா உடனடியாக பழனிசாமியின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவரது அம்மா மற்றும் அக்காவிடம் இது குறித்து கேட்க தயக்கத்துடன் அவர் உட்கார்ந்து இருக்கும் நிலையில் பழனிசாமியின் அக்கா சுந்தரி, பாக்யாவிடம், பழனிசாமி - பாக்யா திருமணம் பற்றி பேசுகிறார்.
பழனிசாமிக்கு பாக்கியா மீது விருப்பம் இருப்பதாகவும் அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது குறித்தும் சுந்தரி கேள்வி எழுப்புகிறார். ஆனால், பாக்யா, தனக்கு இதில் தனக்கு விரும்பம் இல்லை என்று மறுக்கிறார். அதுமட்டுமில்லாமல், பழனிசாமியிடம் இந்த விஷயத்தை கூறினால் அவரும் இதை மறுக்கவே செய்வார் என்றும் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழகக் கூடாதா உடனே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமா என்றெல்லாம் பலவாறாக கேள்வி கேட்டுவிட்டு அங்கிருந்து பாக்யா கிளம்புகிறார்.
இதுகுறித்து பழனிசாமிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அவரது அம்மா கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து ரெஸ்டாரெண்டுக்கு திரும்பும் பாக்யா உடனடியாக இதுகுறித்து பழனிச்சாமியிடம் பேச அவரது கபேவிற்கு செல்கிறார். அங்கே பழனிசாமி - பாக்யா இருவரும் சூப்பர் மார்க்கெட் போக வேண்டும் என்று பேசிக் கொள்கின்றனர். இருவரும் காரில் செல்வதாகவும் கூட வரவேண்டும் என்றும் பழனிச்சாமி கேட்கிறார். இதையடுத்து இருவரும் காரில் சூப்பர் மார்க்கெட் செல்கின்றனர்.
அப்போது, பாக்யா இந்த விஷயம் குறித்து பழனிசாமிடம் பேச இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பேச தொடங்குகிறார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“