ராதிகா மயக்கம்… மீண்டும் முருங்கை மரம் ஏறிய கோபி… பாக்யாவுடன் டைவர்ஸ்?
ராதிகாவின் மீதுள்ள மயக்கத்தால், கோபி பாக்யாவை விட்டுவிடவும் தயார் என்று கூறியுள்ளதால், கோபி மாம்ஸ் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார். பாக்யாவை டைவர்ஸ் செய்வாரா? என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தனது மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த ராதிகா, கோபடமடைந்து புறப்பட்டு செல்கிறாள். இனிமேல் கோபியை சந்திக்கவே கூடாது என்று ராதிகா முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியலட்சுமி குடும்பம்தான் உலகம் என்று நினைக்கும் நல்ல குணமுள்ள இல்லத்தரசி. எழிலன், அகிலன் என வளர்ந்த 2 பிள்ளைகளின் தாய். பாக்யாவின் கணவன் கோபி படித்த பிஸினஸ் செய்பவர். கோபிக்கு, ராதிகா என்ற கல்லூரி கால பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.
பாக்யாவும் ராதிகாவும் தோழிகள், ராதிகாவுடனான தொடர்பை பாக்யாவுக்கு தெரியாமலும் பாக்யாதான் தனது மனைவி என்று ராதிகாவுக்கு தெரியாமலும் சமாளித்து வருகிறான். கோபிக்கு ராதிகாவுடன் திருமண உறவு மீறிய காதல் இருப்பது கோபியின் மகன் எழிலனுக்கும் அப்பாவுக்கும் தெரியவருகிறது. கோபியின் அப்பா அவனிடம் சண்டைபோட்டதால் பாக்யாவிடம் அன்பாக இருப்பதுபோல நடந்துகொள்கிறேன்.
இந்த நிலையில்தான், பாக்யாவும் கோபியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போயிருந்தபோது, அந்த திருமணத்துக்கு வரும் ராதிகா, கோபி மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து கோபத்துடன் அங்கே இருந்து புறப்படுகிறாள். அப்போதும், பாக்யாதான் கோபியின் மனைவி என்று அவளுடைய முகம் பார்க்காமலே புறப்பட்டு வருகிறாள்.
Advertisment
Advertisement
இந்த நிலையில், பாகியலட்சுமி சீரியலின் இந்த வார புரமோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புரமோ வீடியோவில், “கோபியிடம் ராதிகா தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறாள். ராதிகா, தன்னை சந்திக்கும் கோபியிடம், இனிமேல் நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இனிமேல் என் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். நீங்க உங்க மனைவியோட அந்நியோன்யமா, சந்தோஷமாதான இருக்கீங்க கோபி, தயவு செய்து என் வாழ்கையில விளையாடதீங்க,” என்று புறப்பட்டு செல்கிறாள்.
ஆனால், கோபி, ராதிகாவின் வீட்டுக்கு சென்று அவளுடன் பேசுகிறான். “நான் பொய் சொல்லல ராதிகா… நான் பொய் சொல்லல ராதிகா… என்னை நம்பு… நீ இல்லாம என்னால இருக்க முடியாது. ராதிகா எனனைவிட்டுப் போய்விடாத ராதிகா” என்று கெஞ்சுகிறான்.
இதையடுத்து, கோபி காரில் செல்லும்போது, அவருடன் இருக்கும் நண்பன், “விட்டால் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்குவ போல” என்று கேட்கிறார். அதற்கு கோபி, “ராதிகாவுக்காக பாக்யாவை விட்டுவிட்டு வரவேண்டிய நிலைமை வந்துச்சுனா, நான் கண்டிப்பா செய்வேண்டா… எனக்கு ராதிகாதான் முக்கியம்” என்று கூறுகிறான்.
ராதிகாவின் மீதுள்ள மயக்கத்தால், கோபி பாக்யாவை விட்டுவிடவும் தயார் என்று கூறியுள்ளதால், கோபி மாம்ஸ் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார். பாக்யாவை டைவர்ஸ் செய்வாரா? என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"