Baakiyalakshmi Serial: வெல்லப்போவது யார்? மல்லுக்கு நிற்கும் கோபி - ராதிகாவின் அம்மாக்கள்!
பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ, கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா ஆகியோரின் சண்டைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ, கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா ஆகியோரின் சண்டைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ, கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா சண்டை
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
Baakiyalakshmi Serial Promo: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அம்மா ஈஸ்வரியும் மனைவி ராதிகாவின் அம்மாவும் மல்லுக் கட்டத் தயாராகும் புரோமோ வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. குடும்பமே உலகமாக நினைத்து வாழும் பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த பாக்கியலட்சுமி. திருமணமான 2 மகன்கள், கல்லூரி படிக்கும் மகள். பாக்கியலட்சுமியின் கணவன் கோபி, படிக்காத வெளி உலகம் தெரியாத மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விவாகரத்து கொடுத்துவிட்டு, தான் கல்லூரி படிக்கும் போது காதலித்த, விவாகரத்து பெற்று ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்த ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறான்.
பாக்கியலட்சுமி மற்றும் மகன்கள் மாமனார், மாமியார் இருந்த வீடு தன்னுடைய வீடு என்று கோபி கூறியபோது, பாக்கியலட்சுமி 18 லட்சம் பணத்தைக் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிவிட்ட பிறகு, கோபி தனது அம்மா ஈஸ்வரி அழைத்ததால், 2வது மனைவி ராதிகாவுடன் முதல் மனைவி பாக்கியலட்சுமியின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், முதல் மனைவி ராதிகாவை வெறுப்பதோடு முட்டாள் என்று அவமதித்து வருகிறார். ஆனால், பாக்கியலட்சுமி தனக்கு தெரிந்த சமையல் கலை மூலம் தனியாக தொழில் தொடங்கி வெற்றி கரமாக நடத்தி குடும்பத்தை கவனித்து வருகிறார்.
செழியன் மனைவி ஜெனிக்கு குழந்தை பிறந்ததன் மூலம் கோபி தாத்தாவான பிறகு, கோபியின் 2வது மனைவி ராதிகா கர்ப்பம் ஆகிறாள். இந்தியா போன்ற சமூகச் சூழலில், தாத்தாவான கோபிக்கு 2வது மனைவி மூலம் மீண்டும் குழந்தை பிறந்தால், இந்த சமூகம் எப்படி நம்மை கேலி பேசும் என்று நினைத்து மகன்கள், செழியன், எழில் மற்றும் குடும்பத்தினர் அனைவருமே அதிர்ந்து போகிறார்கள். கோபியின் அம்மா ஈஸ்வரி கேட்டுக் கொண்ட பிறகு, ராதிகா தனது வயிற்றில் வளரும் குழந்தையைக் கலைக்க மறுத்துவிடுகிறாள். மேலும், அந்த குழந்தையை பெற்றுக்கொள்ளப் போவதாக உறுதியாகக் கூறிவிடுகிறார்.
Advertisment
Advertisements
இதையடுத்து, செழியனும் எழிலனும் தனது தந்தை கோபியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்கள். ஆனால், கோபி ஒரு நாடகம் ஆடி, அவருடைய அம்மா ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டுக்கு செல்கிறார். ஏற்கெனவே, கோபியின் அம்மா ஈஸ்வரியும் ராதிகாவின் அம்மாவும் சண்டை போட்டிருந்ததால், மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை மூள்கிறது.
ராதிகாவின் அம்மா இந்த முறை ஒரு வார்த்தை கூட பேசாமல், சண்டை போடாமல், கோபியின் அம்மாவை வீட்டை விட்டு வெளியேற்றப் போவதாக தனது மகள் ராதிகாவிடம் கூறுகிறார்.
அதே நேரத்தில், கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றால் தான் இங்கேதான் இருப்பேன். ஈஸ்வரியின் அம்மாவை எப்படி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறேன் பார் என்று கோபியிடம் சொல்கிறார். இப்படி, கோபியின் அம்மா ஈஸ்வரியும் ராதிகாவின் அம்மாவும் மல்லுக்கட்டத் தயாராகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார எபிசோடுகளுக்கான புரோமோ வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. மனைவி, அம்மா இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு திண்டாடிக்கொண்டிருக்கிறார்.
இப்படி, பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ, கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா ஆகியோரின் சண்டைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“