வயதான கோபி போட்டோ ரிலீஸ்: முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்?

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் கணவராக நடிக்கும் கோபி, சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்த நிலையில், அவர் வயதான தோற்றத்தில் உள்ள போட்டோ வெளியிட்டிருப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் கணவராக நடிக்கும் கோபி, சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்த நிலையில், அவர் வயதான தோற்றத்தில் உள்ள போட்டோ வெளியிட்டிருப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Vijay tv, baakiyalakshmi serial, sathish, gopi, வயதான கோபி போட்டோ ரிலீஸ், முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல், aakiyalakshmi serial may come to end, Gopi character artist Sathish reveals old age photo

பாக்கியலட்சுமி சீரியல் கோபி வயதான புகைப்படம் ரிலீஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் கணவராக நடிக்கும் கோபி, சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்த நிலையில், அவர் வயதான தோற்றத்தில் உள்ள போட்டோ வெளியிட்டிருப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பார்வையாளர்கள் மத்தியி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத திருப்பங்களை சந்திகக் உள்ளது. இந்நிலையில், பாகியலட்சுமி சீரியல் பற்றி பலசு வாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டில் ஜெனி தவறி கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு வயிற்றுவலியில் துடிக்கிறார். இதே நேரத்தில் இனி ஜெனியை மருத்துவமனையில் ராதிகா தான் சேர்க்க இருக்கிறார் என்ற புரோமோ வெளியாகி இருக்கிறது.

வீட்டில் யாரும் இல்லாததால் ஜெனியை ராதிகா தான் கொல்ல முயற்சி செய்து விட்டார் என்று இனி ஈஸ்வரி புது பிரச்சனையை கிளப்ப இருக்கிறாராம். அதே நேரத்தில், கோபி மற்றும் ராதிகா செய்யும் பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் பாக்கியா எந்த பதிலும் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால், இனி பாக்யா என்ன முடிவு செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் கலந்த மனநிலையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

அதே நேரத்தில், கோபி எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் பழைய வீட்டிற்கு போகவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு கோபியை மீண்டும் பழையபடி தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

மேலும், ராதிகா மீது ஈஸ்வரி சுமத்தி உள்ள இந்த குற்றச்சாட்டுகளை கோபி எப்படி எடுத்துக் கொள்வார். இனி கோபி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

publive-image

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வயதான ரூபத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதுதான் வயதான கோபி என்று பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

ஏற்கனவே, பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன வரப்போகிறது என்பது பற்றி அடிக்கடி அப்டேட் கொடுக்கும் சதீஷ், வயதான புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவடைந்து விரைவில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே, இந்த சீரியலில் இருந்து தான் 10, 15 எபிசோட்டில் விலகப் போவதாக கோபி தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ராதிகாவும் நானும் இந்த சீரியலில் இனி இருப்போமா இல்லையா என்பது தெரியாது என்றும் கூறியிருந்தார். அதனால் இனி இரண்டாவது பாகத்தில் ராதிகா கேரக்டர் இருக்காதா? அப்போ கோபி மட்டும் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டாவது பாகத்தில் இனி கோபி மட்டும் கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் பாக்யா இனி எப்படி இருப்பார் என்றும் பலர் எதிர்பார்க்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: