Baakiyalakshmi serial New Promo Baakiya and Gopi Court Scene Viral விவாகரத்து வழங்க கோர்ட் உத்தரவு: கோபி- பாக்யா உறவு அவ்வளவுதானா? | Indian Express Tamil

விவாகரத்து வழங்க கோர்ட் உத்தரவு: கோபி- பாக்யா உறவு அவ்வளவுதானா?

கோபியுடன் கோர்ட்டுக்கு வரும் பாக்யா கோபியை விவாகரத்து செய்ய ஒப்புக்கொள்கிறார்.

விவாகரத்து வழங்க கோர்ட் உத்தரவு: கோபி- பாக்யா உறவு அவ்வளவுதானா?

கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், கோபியின் ஆசைப்படி விவாகரத்தும் கொடுத்துவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி. தொடர்ந்து மக்களின் பெரிய வரவே்றபை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக கோபி பாக்யா இடையே நடந்த குடும்ப சண்டையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டார் என்பதையும், அதற்காக தன்னையும் விவாகரத்து செய்ய ஆசைப்படுகிறார் என்பதையும் புரிந்துகொண்ட பாக்கிலட்சுமி, தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறிய பின் ஈஸ்வரி மற்றும் பாக்யாவின் பிள்ளைகள் என அனைவரும் கோபிடம் பேசாமல் ஒதுங்கி இருக்கின்றனர். இனியா கோபியை பார்த்து திட்டிவிட்டு அழுகிறாள். இதனால் தற்காலிகமாக பாக்யாவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் சென்ற கோபி அங்கு ராதிகா பெயரை வாங்கி கட்டிக்கொண்டார்.

இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கோபிக்கு வக்கீல் போன் செய்து விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருவதாக கூற கோபி கடுப்பாகிறார். இதனிடையே திடீரென வீட்டிற்கு வரும் பாக்யா, நீங்கள் விரும்பி விவாகரத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லி வீட்டார் அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்.

Baakiyalakshmi | 3rd to 6th August 2022 - Promo

அத்துடன் எபிசோடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரும் நாட்களுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் கோபியுடன் கோர்ட்டுக்கு வரும் பாக்யா கோபியை விவாகரத்து செய்ய ஒப்புக்கொள்கிறார். அதன்படி கோர்ட் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறது. இதன்பிறகு பாக்யா கோபி முன்பு கெத்தாக நடந்து வருகிறார். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial new promo baakiya and gopi court scene viral