ஒரே கேள்வி தான்…. கோபி நாக் அவுட்… பாக்யாவின் முடிவு சரியாக அமையுமா?

குடும்பத்தில் பாக்யாவின் மாமனாரை தவிர மற்ற அனைவரும் பாக்யா செய்தது தான் தவறு என்பது போல அவளை குறை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஒரே கேள்வி தான்…. கோபி நாக் அவுட்… பாக்யாவின் முடிவு சரியாக அமையுமா?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனிடையே கோபி பாக்யா விவாகாரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்த நிலையில், தைரியமாக கோர்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்து செய்வதாக கூறியதை தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து முடிந்துவிட்டது அதனைத் தொடர்ந்து பாக்யாவை திட்டிவிட்டு நேராக ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி விஷயத்தை சொல்லிவிட்டார்.

அதன்பிறகு வீட்டுக்கு வந்த கோபி விவாகரத்து பற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லி, இனிமேல் பாக்யாவுக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று சொல்லிவிடுகிறார். அப்போது பாக்யா வீட்டுக்கு வருகிறார் அவளிடம் குடும்பத்தினர் அனைவரும் கோபி நல்லவர் போலவும். பாக்யா தப்பு செய்தது போலவும் பேசுகின்றனர்.

இத்தனை பேச்சுக்கும் பாக்யா அமைதியாகவே நிற்கிறார். ஆனால் குடும்பத்தில் பாக்யாவின் மாமனாரை தவிர மற்ற அனைவரும் பாக்யா செய்தது தான் தவறு என்பது போல அவளை குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எழில் பதிலடி கொடுத்தாலும் அவன் சொல்வதை வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில். இனிமேல் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை ஓவரா சீன் போடாம உடனே கிளம்பு வீட்டை விட்டு வெளியே போ என்று கோபி சொல்கிறார். அப்போது இனியா பாக்யாவிடம் நான் இவ்வளவு சொல்லியும் என்னைவிட்டு போறீயாமா என்று கேட்கிறாள்.

அதற்கு பதில் சொல்லும் பாக்யா நான் வெளியில் சென்றாலும், எவ்வளதூன் மாறினாலும். நான என் அம்மா என்பது மட்டும் மாறாது என்று சொல்கிறாள். அப்போது கோபி குறுக்கிட்டு என் குழந்தைகிட்ட நீ என்ன பேசிக்கிட்டு இருக்க உடனே இங்கிருந்து கிளம்பு என்று சொல்கிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாக்யா இனியா உன்க்கு அம்மா கூட இருக்கனுமா இல்ல அப்பா கூட இருக்கனுமா என்று கேட்டு கேட்கிறார்.

Baakiyalakshmi | 12th August 2022 - Promo

பாக்யாவின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சியடைய கோபி அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது இதனால் அடுத்து என்ன நடக்கும், இனியா அம்மாவுடன் செல்வரா அல்லது அப்பாவுடன் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial promo bhagya talk to iniya gopi was shocked