பாக்யா வீட்டுக்கு வரப்போகும் ராதிகா கணவர்… ‘கொலை செய்வேன்’ என கொந்தளிக்கும் கோபி!

உன் வீட்டுக்கு வந்து உனக்கும் ராதிகாவுக்கும் இடையே உள்ள உறவை எல்லார்கிட்டயும் சொல்கிறேன் என்று ராஜேஷ் சொன்னதைக் கேட்டு, கோபி வந்தனா உன்னை கொலை செய்துவிடுவேன் என்று கொந்தளிக்கிறான்.

vijay TV, Baakiyalakshmi serial, Baakiyalakshmi serial promo video, Gopi death threaten to Radhika's husband Rajesh, Radhika, Bakya, விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல், பாக்யா வீட்டுக்கு வரப்போகும் ராதிகா கணவர் ராஜேஷ், கொலை செய்வேன் கோபி, ராஜேஷ் எழிலன், Ezhil, Jennifer, Akian, Baakiyalakshmi serial today promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் திடீர் திருப்பமாக, ஏற்கெனவே கல்யாணம் ஆகி வளர்ந்த பிள்ளைகளின் தந்தையாக இருக்கிற கோபி, மனைவி குடும்பத்துக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவுடன் பழகி வருகிறான். இதனால் கோபமடையும் ராதிவிகாவின் கணவர் ராஜேஷ் கோபியை சந்தித்து உன் வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டயும் சொல்றேன் என்று கூறுகிறான். இதைக்கேட்டு கோபி, வீட்டுக்கு வந்தனா அங்கேயே உன்னை கொலை பண்ணிவிடுவேன் என்று மிரட்டுகிறான். இந்த புரோமோ வீடியோ பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா பொறுப்பான அன்பான குடும்பத் தலைவியாக இருக்கிறார். 2 மகன்கள் ஒரு மகள், மருமகள் என வளர்ந்த பிள்ளைகளின் தாயாக இருக்கும் பாக்யா குடும்பம்தான் உலகமாக இருக்கிறார். சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், பாக்யாவின் கணவன் கோபி, தனது மனைவி பெரிய அளவில் படிக்காதவள் என்பதால் தனது முன்னாள் காதலி ராதிகா மீது ஆசைப் படுகிறார். பாக்யாவுக்கும் ராதிகாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. ஆனால், பாக்யாவின் கணவர் யார் என்பது ராதிகாவுக்கு தெரியாது. ராதிகா ஏற்கெனவே திருமணமாகி மயூ என்ற பெண் குழந்தையுடன் இருக்கிறாள். ராதிகா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒற்றை தாயாக வசித்து வருகிறாள். கோபி, தனது முன்னாள் காதலி ராதிகாவுடனான தொடர்பை மனைவி ராதிகாவுக்கு தெரியாமலும் தனது மனைவியைப் பற்றி முன்னாள் காதலி ராதிகாவுக்கும் தெரியாமல் மறைத்து வருகிறார்.

இதனிடையே, ராதிகாவின் கணவர் ராஜேஷ் அவ்வப்போது, ராதிகாவின் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறார். கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருப்பது எழிலுக்கும் தெரியவருகிறது. ராஜேஷ் ஒருமுறை எழிலை சந்தித்து உங்கள் அப்பா கோபி எனது மனைவியின் வீட்டுக்கு அடிக்கடி வருகிறார் என்று சொல்கிறான். கோபியும் ராதிகாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறான்.

தற்போது, பாக்யா ஸ்கூட்டரில் போகும்போது விழுந்து அவருடைய காலில் பலமாக அடிபட்டு இருக்கிறார். பாக்யா கால் வலியுடன் வீட்டு வேலைகளையும் செய்கிறார். இளையமகன் எழில் அம்மாவுக்கு உதவி செய்கிறான்.

இந்த சூழலில்தான், பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பமாக கோபியும் ராதிகாவின் கணவர் ராஜேஷும் வாக்குவாதம் செய்து மோதிக்கொள்ளும் புரோமோ விடீயோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், உன் வீட்டுக்கு வந்து உனக்கும் ராதிகாவுக்கும் இடையே உள்ள உறவை எல்லார்கிட்டயும் சொல்கிறேன் என்று ராஜேஷ் சொன்னதைக் கேட்டு, கோபி வந்தனா உன்னை கொலை செய்துவிடுவேன் என்று கொந்தளிக்கிறான்.

விஜய் டிவி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இன்றைய எபிசோடு புரோமோ வீடியோவில், ராதிகாவை விட்டு பிரிந்திருக்கும் அவளுடைய கணவன் ராஜேஷ், பாக்யாவின் கணவர் கோபியை சந்திக்கிறான். அப்போது, கோபி கோபப்பட்டு கையை உயர்த்துகிறான். ஆனால், ராஜேஷ் “அடச்சே கையை எறக்கு, ஏற்கெனவே உன்னைப் பார்க்க ரெண்டு தடவை உன் வீட்டுக்கு வந்தேன். முதல் தடவை ஏதோ ஒன்னு சொல்லி உன் வீட்ல இருந்து என்னை அனுப்பிவிட்ட, ரெண்டாவது தடவை உன் பையங்கிட்ட நீ ராதிகாவோட இருக்கிற போட்டோவை எல்லாம் காட்டினேன். அப்பகூட நீ அடங்கல இல்லை” என்று கேட்கிறான். ராஜேஷ் சொன்னதைக் கேட்டு போபமடையும் கோபி, “இதை சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லை. தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டி சும்மா ஒருத்தன்கூட நின்னுகிட்டு இருந்ததை போட்டோ எடுத்து அதையெல்லாம் ஒருத்தன்கிட்ட காட்டிகிட்டு இருக்கியே, சொல்றதுக்கு உனக்கு நா கூசல” என்று கேட்கிறான்.

இதற்கு ராஜேஷ் ரொம்ப கூலாக, “டேய்! உனக்கே இதில வெட்கம் இல்லை, எனக்கென்னயா வெட்கம், அவ்வளவு பெரிய பசங்கள வச்சுக்கிட்டு, என் வீட்டு வர உனக்கு வெட்கமா இல்லை, சரி அதெல்லாம் இப்ப விடு, இந்த கதையெல்லாம் பேசி பேசி நான் ‘டயர்ட்’ ஆயிட்டேன். இத பார், நான் உன் வீட்டுக்கு வர்றேன். வந்து உன் குடும்பத்தைப் பார்க்கிறேன். எல்லார்கிட்டயும் இதை சொல்றேன். ஏன் நைட்டு வர்றேன்னு சொன்னனா, அப்பதான எல்லோரும் வீட்ல இருப்பீங்க, அதனால, நானே நேர்ல வந்து நியாயத்தைக் கேட்கிறேன். இப்படி இந்த ஆளு என் வீட்டுக் வறான், நான் என்ன செய்யட்டும்னு கேட்கிறேன்.” என்று கூறுகிறான்.

இதைக் கேட்டு கோபமாகும் கோபி, “ஏய், நீ என் வீட்டு பக்கம் மட்டும் வந்த, உன்னை அங்கேயே கொன்னு குழிதோண்டி புதைச்சுடுவேன்.” என்று கொந்தளிக்கிறான். இதைகேட்டு அசராத ராஜேஷ், “நீயும்தான் என் வீட்டு பக்கம் டெய்லியும் வர்றயே, ஏன் நான் உன்னை கொல்ல வேணாம்” என்று கேட்கிறான்.

ராதிவிகாவின் கணவர் ராஜேஷ் கோபியை சந்தித்து, உன் வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டயும் சொல்றேன் என்று கூறுகிறான். இதைக்கேட்டு கோபி, வீட்டுக்கு வந்தனா அங்கேயே உன்னை கொலை பண்ணிவிடுவேன் என்று மிரட்டுகிறான். ராஜேஷுக்கும் கோபிக்கும் இடையேயான இந்த மோதல் புரோமோ வீடியோ பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Baakiyalakshmi serial promo video gopi death threaten to radhikas husband rajesh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com