ராதிகாவுடன் திருமணம் வரை சென்றது பாக்யாவுக்கு தெரிந்து தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ள கோபியிடம், ராதிகா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு நிலைகுலைய வைத்துள்ளார்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா எடுத்த அதிரடி முடிவுகளும் அதன்பிறகு கோபி குடும்பத்தினர் நடந்துகொண்ட விதமும் பரபரப்பின் உச்சமாக இருந்தது
தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், கோபியை திருமணம் செய்வது தொடர்பான ராதிகா என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல் கோபி பாக்யாவின் கணவர் என்று தெரிந்ததும் ராதிகா ஊரைவிட்டு செல்ல முடிவு செய்துவிட்டார். ஆனாலும் மயூக்கு உடம்பு சரியில்லை என்பதால் தற்போது இங்கேயே இருக்கிறார்.
இதனிடையே பாக்யா வீட்டில் இல்லாததால் குடும்பத்தினர் அனைவரும் கவலைப்பட்டு வரும் நிலையில், கோபி ராதிகா பாக்யா இருவரை பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே இன்று ராதிகா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை பாக்யாவை வீட்டிற்கு அழைத்து வரலாம் என்று புறப்படுகிறார் கோபி.
வழியில் கோபியை பார்க்கும் ராதிகா, என்னை ஒரு நம்பக்கூடாத ஆளா இன்னொருவரோட புருஷனை அபகரிக்கிற பொண்ணா என்ன சொல்லி வச்சிருக்கீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு எனக்கு தெரியும்தான். இருந்தாலும் டீச்சர் தான் உங்க ஃவைப்னு தெரிஞ்சிருந்தா நா எப்போலோ விலகிருப்பேன் என்று சொல்கிறார்.
இதை கேட்ட கோபி இதுக்கு என்ன ராதிகா அர்த்தம் என்று கேட்க, மேலும் பாக்யா இல்லாம வேற ஒரு பொண்ணா இருந்தா அப்போ உனக்கு ஓகேவா, இதுல என்ன லாஜிக் இருக்கு? என்று கேட்க, அதற்கு ராதிகா என்ன கோபி முட்டாள்தனமா பேசிகிட்டு இருக்கீங்க, நீங்க என்ன சொன்னீங்க என் ஃவைப் சரியில்ல. என்னை யாருமே கவனிக்கலனு தான சொன்னீங்க.
என் ஃவைப்க்கு என்னை பிடிக்காது அதனால ரெண்டுபேரும் சேர்ந்து டைவர்ஸ் பண்றோம்னு தானே சொன்னீங்க என்று கேட்க தயவு செய்து அதை விடு என்று கோபி சொல்லிவிடுகிறார்.
அதன்பிறகு நீ என்னை நேசிக்கிறதும், நான் உன்னை நேசிக்கிறதும் அதல்லாம் உண்மை தானே. என்ன நடுல எனக்கு கல்யாணம் நடந்தது உண்மைதான். ஆன நம்ம ரெண்டுபேருக்கும் இடையில ஏதோ அன்பு தேவைப்பட்டுச்சு அதனால தான் நாம் சேர்ந்தோம் அதனால் ஒருத்தர் குடும்பத்தை ஒருவர் கேடுக்க நினைக்கல. ஆனா உன்ன எனக்கு புடிக்க காரணம் என்னை உனக்கு பிடிக்க காரணம் இப்ப நினைத்து பார்த்தாலும் சந்தோஷமாதான் இருக்கு என்று கோபி சொல்கிறார்.
இதை கேட்ட ராதிக ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“