Baakiyalakshmi Serial: கொலை முயற்சி வழக்கு தொடுத்த கமலா; ஜெயிலுக்குப் போகும் ஈஸ்வரி... என்ன செய்வார் பாக்யா?
பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தார் கோபியின் அம்மா ஈஸ்வரி என்று ராதிகாவின் அம்மா கமலா தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஈஸ்வரியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால் சீரியல் பெரும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
ராதிகாவை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தார் கோபியின் அம்மா ஈஸ்வரி என்று ராதிகாவின் அம்மா கமலா தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஈஸ்வரியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால் சீரியல் பெரும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
விஜய் டிவியில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தார் கோபியின் அம்மா ஈஸ்வரி என்று ராதிகாவின் அம்மா கமலா தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஈஸ்வரியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால் சீரியல் பெரும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
Advertisment
தமிழ் பொழுதுப்போக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இடையே டி.ஆர்பி.பி ரேட்டிங்கில் எப்போதும் ஒரு பெரும் போட்டி இருந்து வருகிறது. அப்படி டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து கலக்கி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.
இந்த வாரம் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடுகள் குறித்து ஒரு புரோமோ வெளியாகி சீரியலின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
கோபி தாத்தாவாகிவிட்ட வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரிக் காலத்தில் காதலித்த டிவோர்ஸ் பெற்று சிங்கிள் மதராக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். ராதிகா கர்ப்பமானதால், குடும்பத்தினர் எதிர்பால், கோபி ராதிகா வீட்டுக்கு செல்கிறார். மகன் கோபி உடன் ஈஸ்வரியும் செல்கிறார். அங்கே கோபியின் அம்மா, ராதிகாவின் அம்மா கமலா இடையே நடக்கும் மோதலில், ராதிகா கர்ப்பம் கலைந்துபோகிறது.
இதையடுத்து, ராதிகாவின் அம்மா கமலா, கோபியின் அம்மா ஈஸ்வரி மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கில், கோபியின் அம்மா ஈஸ்வரி, மருமகள் ராதிகா கர்ப்பமாக இருப்பது பிடிக்காமல் ராதிகாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை முயற்சி செய்தார். அதில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று நீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது.
ராதிகாவும் கோபியின் அம்மா ஈஸ்வரிதான் தன்னை கீழே தள்ளிவிட்டார் என்று நீதிமன்றத்தில் சாட்சி கூறுகிறாள். அதே போல, கோபியிடம் ராதிகா கர்ப்பமாக இருப்பது உங்களுடைய அம்மா ஈஸ்வரிக்கு பிடிக்காது தானே என்ற கோபி கேள்விக்கு ஆமாம் என்று பதிலளிக்கிறார்.
இதையடுத்து, ராதிகா தரப்பு வழக்கறிஞர், ஈஸ்வரி கொலை முயற்சியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதைக்கேட்டு, ஈஸ்வரி பெரும் அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரியின் மூத்த மருமகள் பாக்கியலட்சுமியும் என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போகிறாள்.
நீதிமன்ற உத்தரவைக் கேட்டு, ஈஸ்வரி தான் கடைசியா சாகிறவரைக்கும் ஜெயிலில் இருந்துதான் சாகணுமா என்று மருமகள் பாக்யாவைப் பார்த்து கேட்டு ஈஸ்வரி இடிந்து போகிறார். பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போகிறாள்.
இந்த வார பாக்கியலட்சுமி புரோமோ சீரியல் மீது பார்வையாளர்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“