scorecardresearch

‘ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி; ஆனா…’: விஜய் டி.வி சீரியல் நடிகை ரேஷ்மா கண்டிஷன்

விஜய் டிவியில் டி.ஆர்.பி.-யில் டாப்பில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பசுப்புலேட்டி, “’ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி; ஆனா… என்று கண்டிஷன்களைப் தெரிவித்துள்ளார்.

Baakiyalakshmi serial, Reshma Pasupuleti says ready to marry fan but haves conditions, 'ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி, ஆனா...': விஜய் டி.வி சீரியல் நடிகை ரேஷ்மா கண்டிஷன், Baakiyalakshmi, Reshma Pasupuleti, Reshma ready to marry fan but haves conditions
ரேஷ்மா பசுபுலேட்டி

விஜய் டிவியில் டி.ஆர்.பி.-யில் டாப்பில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பசுப்புலேட்டி, “’ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி; ஆனா… என்று கண்டிஷன்களைப் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி மற்றும் பிக் பாஸ் தமிழ் புகழ் ரேஷ்மா பசுப்புலேட்டி இன்ஸ்டாகிராமில் தனது பின்தொடர்பாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பலவிதமான கேள்விகளுக்கு மத்தியில், ஒரு பின்தொடர்பவர் அவரை “எப்படி கடத்துவது” என்று கேட்டார். அதற்கு, நகைச்சுவையாக விவரங்களை மின்னஞ்சல் செய்கிறேன் என்று கூறினார் ரேஷ்மா.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷுக்கு என்ன ஆச்சு, அவர் உண்மையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறாரா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ‘கோபி சீரியஸாக விலகினாரா? எனக்குத் தெரியாது, பாக்கியலட்சுமி படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூலுக்கு செல்லும் போது கேட்டு சொல்கிறேன்’ என்று பதிலளித்தார் ரேஷ்மா.

இன்னொரு ரசிகர், ரேஷ்மாவை திருமணம் செய்துக் கொள்ள கேட்டார். அதற்கு அவர், “கண்டிப்பா டா, ஆனால் அம்மா என்னை அனுமதிக்க மாட்டார். என்ன செய்வது??” என்றார். ஒரு பெண்ணை நேசிப்பதை எப்படி நிறுத்துவது என்று ஒரு பின்தொடர்பாளர் கேட்டபோது, “ஒருவரை நேசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதற்கான பதிலை நீங்கள் கண்டறிந்தால், எனக்கும் தெரியப்படுத்துங்கள்! நான் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி கோடிக்கணக்கில் சம்பாதிப்பேன். அதுவரை மன்னிக்கவும் நண்பரே, என்னிடம் பதில் இல்லை” என்று ரேஷ்மா பசுப்புலேட்டி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial reshma pasupuleti says ready to marry fan but haves conditions

Best of Express