Baakiyalakshmi Serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில், குடும்பத் தலைவியாக பாக்கியலட்சுமி இருக்கிறார். தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்திற்காக அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். மேலும், தனது திறமையை வெளிகாட்டுவதற்காக பல அவமானங்களை சந்திக்கிறார்.
ஆனால், கணவர் கோபியோ தனது மனைவிக்கு தெரியாமல் பள்ளி தோழியுடன் பழகி காதலில் விழுகிறார். இதை குடும்பத்தில் யாருக்கும் தெரியாமலும் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வர, பிறகு பிரச்சனை வெடிக்கிறது. பரபரப்பும் தொற்றிக்கொள்கிறது.

தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முதன்முறையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் மாற்றம் நடந்துள்ளது. செழியனாக நடித்து வந்த ஆர்யன் தொடரை விட்டு விலக அவருக்கு பதிலாக இப்போது புதிய நடிகர் நடித்து வருகிறார். அவர் யார் என்பது சமீபத்திய பாக்கியலட்சுமி புரொமோவுடன் வெளியாகியுள்ளது.
இதுஒருபுறமிருக்க, பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த நடிகர் ஆர்யன் திடீரென வெளியேறி இருக்கிறார். அவர் இப்படி வெளியேறியதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

ஆர்யன் நடித்த “கனா காணும் காலங்கள்” விரைவில் ஓடிடி ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது. விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகவுள்ள இந்த புதிய ஷோவில் ஆர்யன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம். இதனால் தான் அவர் பாக்கியலட்சுமியில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“