Advertisment

Baakiyalakshmi Serial: என் மேல நம்பிக்கை இல்லையா? ராதிகாவிடம் கோபப்படும் கோபி

ராதிகா வீடு டாக்குமெண்ட் பற்றி அட்வகேட் கிட்ட விசாரித்ததாக சொன்னதைக் கேட்டு கோபமடையும் கோபி, “ஓஹோ… என் மேல நம்பிக்கை இல்லாம உன்னோட அட்வகேட்ட வச்சு வெரிஃபை பண்ணியிருக்க… அப்படிதான” என்று கேட்கிறான்.

author-image
WebDesk
New Update
baakiyalakshmi serial, vijay tv, baakiyalakshi serial today, baakiyalakshi serial today episode, பாக்கியலட்சுமி சீரியல், விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு, கோபி, ராதிகா, ராதிகாவிடம் கோபப்படும் கோபி, பாக்யா, radhika, gopi, baakiyalakshmi, gopi anger on radhika

பாக்யாவின் வீட்டில், பாக்யா, செல்வி, ஜெனிஃபர், தாத்தா, பாட்டி 4 பேரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் விற்பனைக்கு கொடுத்த மசாலா தீர்ந்துவிட்டது என்று அதனால், மசாலா அறைப்பது பற்றி பேசுகிறார்கள். ஆன்லைன் மசாலா விற்பனை குறித்து ஜெனிஃபர் பாட்டிக்கு விளக்கு சொல்கிறாள். மசாலா அறைக்க மசாலாவுக்கான மளிகைப் பொருட்கள் எழுதுகிறார்கள்.

Advertisment

பாக்யா மசாலா பொருட்களை சொல்ல செல்வி ஒரு நோட்டில் எழுதுகிறாள். அப்போது அங்கே வரும் எழில், செல்வியிடம் என்ன எழுதியிருக்கீங்க… என்று கேட்கிறான்.

publive-image

நோட்டை வாங்கி அதில் செல்வி எழுதியுள்ளபடி “மீளகாய் வத்தால் 10 கிலோ” என்று எழில் படிக்க, ஐயோ தம்பி மிளகாய் வத்தல் என்று கூறுகிறாள் செல்வி. இதைக்கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள்.

இதையடுத்து, எழில் தான்யா 5 கிலோ என்று படிக்க செல்வி “ஐயோ தம்பி தனியா, தனியா” என்று கூறுகிறாள்.

நால மிளகு 4 கிலோவா என்று எழில் புரியாமல் படிக்க, செல்வி நல்ல மிளகு என்று செல்வி கூறுகிறாள்.

வொந்தயம் ஒரு கிலோ என்று செல்வி எழுதியதை எழில் படிக்க, பாக்கியலட்சுமி, ஜெனிஃபர், பாட்டி எல்லோரும் சிரிக்கிறார்கள். உடனே செல்வி, எழில் தம்பி வெந்தயம் என்று திருத்துகிறாள்.

இதைக்கேட்டு பாட்டி என்னடா எழுதியிருக்கா என்று கேட்க, “பாட்டி இதுமட்டுமில்ல, ஈஸ்வரி மசாலாவுக்கு ஐஸ்வரி மசலானு எழுதியிருக்காங்க… ” என்று எழிலு சொல்கிறான்.

பாட்டி இப்படியா எழுதியிருக்கா என்று செல்வி எழுதிய மசாலா லிஸ்ட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆமா அப்படிதான் எழுதியிருக்கிறாள்.

அப்போது, பாக்யா, “இவகிட்ட நாம் ஏதாவது எழுதச் சொன்னா நாம் அவ்வளவுதான். அன்னைக்கு மளிகை லிஸ்ட்டைக் கொண்டுபோய் கடையில கொடுத்ததுக்கு கடையில அதைப் பார்த்து எல்லோரும் சிரிச்சிட்டாங்க… ஆனாலும் நானே எழுதுறனு வாங்குவா..” என்று கூறுகிறாள்.

ஜெனிஃபரும் பாட்டியிடம் இருந்து செல்வி எழுதிய லிஸ்ட்டை வாங்கிப் பார்த்து, ஆமாம் என்று கூறுகிறாள்.

தொடர்ந்து செல்வி எழுதுவதைப் பற்றி கூறும் பாக்யா, “இவ எப்பவுமே அப்படிதான் எழுதும்போது தேவை இல்லாத இடத்தில கால் போடுவா, தேவையான இடத்தில கால ஒடச்சிடுவா…” என்று கூற வீட்டில் அனைவரும் சிரிக்கிறார்கள்.

அப்போது, செல்வி, “அக்கா நான்லாம் அஞ்சாம் கிளாஸ்தான் படிச்சிருக்கேன் மறந்துபோயிருச்சு… இப்படித்தான் எழுதுவேன்.. என்ன இப்ப… எல்லாருக்கும் புரியுது இல்ல.” என்று கேட்கிறாள்.

எழில் நல்லாவே புரியுதுக்கா… நொல்ல மிளகு நல்லாவே புரியுது…” என்று ஜாலியாக கூறுகிறான்.

அப்போது, வீடு விற்பனை செய்யும் சுந்தரி வீட்டுக்கு வருகிறார்.

செல்வி, பணம்னு சொன்ன உடனே சுந்தரியக்கா எப்படி ஓடிவருகிறது பாரு என்று கிண்டல் செய்கிறாள். இதைக்கேட்டு சுந்தரி கடுகடுவெனெ முகத்தைக் காட்டுகிறாள்.

“பாக்யா செல்வியை பேசாம சும்மா இருக்கச் சொல்லு” என்று சுந்தரி கூறுகிறாள். அதற்கு பாட்டி, இவளை சும்மா இருக்க சொல்வது ரொம்ப கஷ்டம் என்று சொல்கிறாள்.

இதையடுத்து, சுந்தரி, “பாக்யா அட்வான்ஸ் கொடுத்துட்டாங்களா?” ன்று கேட்க பாக்யாவும் ஆமாம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்கள் என்று கூறுகிறாள்.

இதையடுத்து, சுந்தரி, “ நாலு அஞ்சு பேரு வீடு கேட்கிறாங்க… யாரு கிட்டயாவது அட்வான்ஸ் வாங்கி கன்ஃபார்ம் பண்ணுனு எங்க வீட்டுகாரர் சொன்னாரு… அதான் அட்வான்ஸ் கேட்டேன்.” என்று சொல்கிறாள்.

publive-image

இதைக்கேட்ட செல்வி, “எக்கா, மூனு நாலு மாசமா அந்த வீடு பூட்டிதான் கிடக்குது… நாங்க வந்து கேட்ட பிறகுதான் நாலு அஞ்சு பேரு வந்து கேட்கிறதுக்கு க்யூல நிக்கிறாங்களா” என்று கவுண்ட்டர் டயலாக் போடுகிறாள். இதைக் கேட்டு சுந்தரி கடுப்பாக, பாட்டி மெதுவாக ஜெனிஃபரிடம் சுந்தரிக்கு செல்வி மாதிரியான ஆளுங்கதான் சரி என்று கூறுகிறது.

ஆனால், சுந்தரி நிஜமாதான் பாக்யா, எத்தனை பேரு கேட்கிறாங்க தெரியுமா? அட்வான்ஸ் கொடுக்குறியா நிறைய வேளை இருக்கு என்று கூறி அட்வான்ஸ் கேட்கிறாள். அப்போது, பாட்டி ஒரு பேப்பரும் இல்லாமல் அட்வான்ஸ் கொடுக்கிறோம். நம்பி தரலாமா? என்று கேட்கிறார். அதற்கு சுந்தரி இத்தனை நாளா பக்கத்து வீட்லதான் இருக்கோம். நான் என்ன ஏமாத்திட்ட போகப்போகிறேன்… இன்னும் ஒரு 10 லட்சம் ரூபாய் மொத்தமா கொடுத்தா ஒரு சேல் அக்ரீமெண்ட் மாதிரி போடலாம்னு எங்க வீட்டுக்காரர் சொல்லிக்கொண்டு இருக்கிரார் என்று கூறுகிறாள்.

அப்போது பாட்டி, எதுக்கும் பணத்தைக் கொடுக்கும்போது ஒரு போட்டோ எடுத்துக்கிறோம் என்று கூற சுந்தரி என்னவொரு நம்பிக்கைமா உங்களுக்கு என்று கூறுகிறாள். அதற்கு பாட்டி, போட்டோ எடுகிறதுல உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு சுந்தரி ஒரு பிரச்னையும் இல்லைமா என்று கூறுகிறார்.

பாட்டி, பாக்யாவிடம் இருந்து பணத்தை வாங்கி சுந்தரியிடம் கொடுக்க, எழில் போடோ எடுக்கிறான். பணத்தை வாங்கிக்கொண்ட சுந்தரி அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறாள். பிறகு, எழில் உள்ளே சென்று விடுகிறான். பாக்யாவும் எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரிதான் என்று கூறுகிறாள்.

இதையடுத்து, பாட்டி, செல்வியிடம் மசாலா பொருட்களை எழுதச் சொல்கிறார். அதற்கு செல்வி, “நீங்க இவ்வளவு சொல்றீங்களே? நீங்க எழுதுங்க பார்க்கலாம்… உங்களுக்கு எழுதத் தெரியுமா தெரியாதா? எதாவது எழுதுங்க பார்க்கலாம்?” என்று கேட்கிறாள். இதனால், கடுப்பாகும் பாட்டி, “எது எனக்கு எழுதத் தெரியாதா? அதுவும் உங்கூட போட்டி போட்டு நான் நிரூபிக்கனுமா?” என்று நோட்டை செல்வியிடம் போட்டுவிட்டு எழுந்து உள்ளே போகிறார்.

ஆனாலும், விடாத செல்வி, பாக்யாவிடம், “ஏங்க்கா பாட்டிக்கு எழுதத் தெரியுமா தெரியாதா? சொல்லுங்க” என்று கேட்கிறாள். அதற்கு பாக்யா, “தப்பா எழுதுவாங்க… ஆனால், உன் அளவுக்கு எல்லாம் தப்பா எழுதமாட்டாங்க” என்று கூற அனைவரும் சிரிக்கிறார்கள். பிறகு, பாக்யா சொல்ல செல்வி மசாலாப் பொருட்களை எழுதுகிறாள்.

அடுத்த காட்சியில், ராதிகா காரில் போய்க்கொண்டிருக்கிறாள். அப்போது கோபி போன் பண்ணி, “ரிஜிஸ்டர் எல்லாம் நல்லபடியா முடிந்ததா” என்று கேட்கிறான். அதற்கு ராதிகா, “ம்ம்ம் எல்லாம் நல்லபடியா முடிந்தது. நான்கூட, ரிஜிஸ்டர் முடிந்ததும் பாடி பணத்தைக் கொடுத்துவிட்டு மீதியை அப்புறம் தர்றோம்னு சொல்வாங்கனு நினைச்சேன். ஆனால், மொத்த பணத்தையும் கொடுத்துட்டாங்க… இப்ப நான் சென்னைக்குதான் வந்துகிட்டிருக்கேன். இன்னும் 2-3 மணி நேரத்தில் வந்துடுவேன்.” என்று கூறுகிறாள்.

publive-image

தொடர்ந்து பேசும், ராதிகா, “என்ன கோபி உங்கள் குரலில் ஏதோ டென்ஷனா இருக்கிற மாதிரி தெரியுது” என்று கேட்கிறாள். அதற்கு கோபி, “ராதிகா எங்க நான் சொன்னா நீ கேக்கிற? நீ இப்ப எவ்ளோ பெரிய பிரச்னையில மாட்டிக்க இருந்த தெரியுமா? நீ அந்த டீச்சர் சொன்னாங்கனு ஒரு வீடு பார்த்திருக்க இல்ல. நான் அதனோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என் அட்வோகேட் கிட்ட கொடுத்து பார்த்து வெரிஃபை பண்ணேன். சாரி ராதிகா அந்த டாக்குமெண்ட்ல நிறைய பிரச்னைகள் இருக்கு. அந்த லேண்ட் மூதாதையர்கள் சொத்தா இருந்திருக்கும் போல இருக்கு. அதில நிறைய பாகப் பிரிவினை நடந்திருக்கு… தாய் பத்திரத்திலும் நிறைய பிரச்னை இருந்திருக்கும் போல இருக்கு, அதெல்லாம் டாக்குமெண்ட்ல முறையா பேர் மாறவே இல்லை. நான் சொல்லாம நீ பாட்டுக்கு அந்த பிராப்பர்ட்டிய பர்ச்சேஸ் பண்றேன்னு சொல்ற. அந்த குடும்பத்தில் ஒருத்தர் யாராவது கோர்ட்ல கேஸ் போட்டாங்கனா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்கிறான்.

அதற்கு ராதிகா, “இல்லை கோபி, நான் என் ஃபிரெண்ட் அட்வகேட் கிட்ட அனுப்பிச்சு செக் பண்ணேன். ஆனால், அவங்க இதைப் பத்தி எதுவும் சொல்லவே இல்லை.” என்று கூறுகிறாள்.

இதைக் கேட்டு கோபமடையும் கோபி, “ஓஹோ… என் மேல நம்பிக்கை இல்லாம உன்னோட அட்வகேட்ட வச்சு வெரிஃபை பண்ணியிருக்க… அப்படிதான” என்று கேட்கிறான்.

அதற்கு ராதிகா, “அய்யோ கோபி அப்படியெல்லாம் இல்லை. நான் அவங்ககிட்டயும் வீடு வாங்கறது பத்தி சொல்லியிருந்தேன். அதனால், ஷேர் பண்ணி இருந்தேன். அவங்க எல்லாம் ஓகே தான்னு சொன்னாங்க…” என்று சொல்கிறாள். இதற்கு கோபி, “அவங்க எல்லாம் அப்படிதான் சொல்வாங்க… நீ வீடு வாங்க போறேன்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்னு சொல்லி இருப்ப… சரி இதுக்குமேல என்ன பண்ணமுடியும்னு அவங்களும் டாக்குமெண்ட்ஸை திருப்பி அனுப்பியிருப்பாங்க… ” என்று கூறுகிறான்.

கோபி தொடர்ந்து பேசும்போது, தானும் அவனுடைய அட்வகேட் ஃபிரெண்டும் வெரிஃபை பண்ணதுல இந்த பிரச்னையைக் கண்டுபிடித்ததாகவும் ராதிகா அந்த வீட்டை வாங்கி குடியேறினால், நாளைக்கே யாராவது கேஸ் போட்டால் என்ன செய்வாய் என்று கேட்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ராதிகா, சாரி கோபி, இது எனக்கு தெரியாது என்று கூறுகிறாள்.

publive-image

இதற்கு கோபி, நீ அந்த டீச்சர் என்ன சொன்னாலும் கேட்கிற என்று கூறுகிறான். அதற்கு ராதிகா “நீங்க எதுக்கு அவங்களை திட்றீங்க… அவங்களுக்கு எதுவும் தெரியாது…” என்று கூறுகிறாள்.

கோபமடையும் கோபி, அதைத்தான் நானும் சொல்கிறான். எதுவுமே தெரியாதவங்ககிட்ட எதுக்கு டீலிங் வச்சுக்கிற… அவங்க காட்ற பிராப்பர்ட்டிய நீ ஏன் போய் வாங்குற?” என்று கேட்கிறான். அதற்கு ராதிகா, “இப்ப நான் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். என்ன பண்றது கோபி” என்று கேட்கிறாள்.

கோபி, “முதல்ல அந்த டீச்சருக்கு போன் பண்ணி அந்த வீட்ட நான் வாங்க இஷ்டமில்லனு சொல்லி அட்வான்ஸை திரும்ப வாங்கு” என்று ராதிகாவிடம் சொல்லச் சொல்கிறான்.

இதைக்கேட்ட, ராதிகா, “இப்படி சொன்னா அவங்களுக்கு கஷ்டமாகிடாதா?” என்று கேட்கிறாள்.

அதற்கு கோபி, “ராதிகா நீ இவ்வளவு செலவு பண்ணி வீடு வாங்கப் போற உனக்கு லாஸ் ஆனா பரவாயில்லையா? வீடு வாங்கி குடியேறின பிறகு ஒருத்தன் காலி பண்ணச் சொல்வான். அப்ப உனக்கு கஷ்டமா இருக்காதா ” என்று கேட்கிறான்.

இதைக் கேட்டு குழப்பமும் அச்சமும் அடையும் ராதிகா, அப்படி எல்லம் இல்லை என்று கூறுகிறாள். கோபி, ராதிகாவிடம் வேறு வழியில்லை. அட்வான்ஸை திரும்பக் கேளு என்னை நம்பு, உனக்கு பெட்டர் வீடா வாங்கித் தருக்கிறேன் என்று கூறுகிறான்.

அடுத்த காட்சியில் பாக்யா வீட்டில் தாத்தா, பாக்யா பிஸினஸ் ஆரம்பிச்சதும் போதும், கணக்கை எழுதத் தள்ள வேண்டியதா இருக்குது என்று கூறுகிறார்.

பாக்யா தாத்தாவுக்கு மிளகு பால் கொண்டுவந்து தருகிறாள். நானே போடறேன்னு சொன்னேனே நீ ஏம்மா போட்ட என்று தாத்தா கேட்க கடுப்பான பாட்டி இவ்வளவு நாள் அவதானே போட்றா என்று கூறுகிறார். உடனே தாத்தா இன்னைக்கு நான் போடறேன்னு சொன்னேன் என்று கூறுகிறார். பாக்யாவும் பரவாயில்ல மாமா என்று கூறுகிறார்.

அப்போது அங்கே வரும் கோபி, அவனுடைய அம்மாவிடம், கால் வலி எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். அதற்கு பாட்டியும் நீ ஒரு மாத்திரை கொடுத்தயே நல்லா கேட்டுச்சுப்பா.. என்று கூறுகிறார். கோபியும், “அம்மா ஒருவாரம் அந்த மெடிசனை ட்ரை பண்ணி பாருங்க… சரியாகலனா நாம டாக்டரை போய் பார்ப்போம்” என்று கூறுகிறான்.

பாட்டி சரி என்று சொல்ல, பக்கத்தில் இருந்த தாத்தா, வலி மாத்திரையா, அப்புறம் வயிறு எரியுதுனு சொல்லப்போற… ஊருக்கு வந்து நீ பேசாம வைத்தியரைப் பாருணா சொன்னா கேக்குறியா? என்று கேட்கிறார். பாட்டியும் போலாம் போலாம் என்று சொல்கிறார். அப்போது, ஒரு போன் வருகிறது. யார் இந்த நேரத்தில் என்று பாட்டி கேட்க, ராதிகா, தெரியல அத்தை என்று கூறிவிட்டு போனை எடுத்து பேசுகிறார். மறுமுனையில், “ஈஸ்வரி மசாலாவா, மசாலா ஆர்டர் பண்ணனும், போன வாரம் உங்க மசாலாவ ஆன்லைனில் வாங்கினேன். நல்லா இருந்தது மேடம், இந்த வாரம் என் பொண்ணுக்கு நிச்சயம் வச்சிருக்கேன். ஃபன்க்‌ஷன் வீட்ல நடக்குது. ஆள் வச்சு சமைக்கிறோம். அதான் உங்ககிட்ட மசாலா வாங்கலாம்னு போன் பண்ணேன்.” என்று கூற பாக்யாவும் தாத்தாவும் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால், பாட்டியும் கோபியும் வழக்கம் போல ரியாக்‌ஷன் கொடுக்கிறார்கள்.

publive-image

இதையடுத்து, போன் பண்ணியவர், நேரில் வாங்கினால், விலை குறைவா இருக்கும் என்று தான் உங்களுக்கு போன் பண்ணினோம். ஆர்டர் லிஸ்ட்டை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். டிஸ்கவுண்ட் கொடுப்பீங்களா? என்று கேட்கிறார். அதற்கு பாக்யா, சந்தோஷத்துடன் தருவதாகக் கூறுகிறாள். ஆர்டருக்கு மேல ஆர்டர் வருது நிற்க நேரம் இல்லை உக்காரம் நேரம் இல்லை என்று பாக்யா கூற, கோபிக்கு கேட்க முடியாமல் நெளிகிறான். பிறகு, பாக்யா இந்த வாட்ஸ் அப்ல அனுப்ப தெரியுமா என்று கேட்க, பாக்யா தெரியும் என்று சொல்கிறாள். ஆனால், தனது மாமனாரிடம் தனக்கு தெரியாது என்று கூறுகிறாள். இதைக் கேட்ட மாமனார், கோபியிடம், “டேய் இதை நானே அனுப்புவேன். பாக்யாவுக்கு தெரியாதா?” என்று கேட்டு சமாளிக்கிறார்.

இதையடுத்து, பாக்யா, “மாமா இதையெல்லாம் யாரோ வேளைக்கே ஆகாதுனு சொன்னாங்க இல்ல…” என்று கோபியை குத்திக் காட்டுவது போல சொல்கிறாள். அதற்கு தாத்தாவும், “சொல்றவங்க சொல்லிட்டு போறாங்கம்மா…” என்று கேட்கிறாள்.

publive-image

மறுபடியும் இன்னொரு போன் வருகிறது. போனை எடுத்து பேசும் பாக்யா, “சொல்லுங்க ராதிகா” என்று கேட்கிறாள். தொடர்ந்து பேசும், ராதிகா, “அந்த வீட்ல ஏதோ பிரச்னை இருக்குன்னு அட்வகேட் சொல்றாங்க… அந்த வீடு வேண்டாம்” என்று சொல்கிறாள். அதற்கு பாக்யா, “அய்யயோ! நீங்க அனுப்பிடன் உடனே அவங்ககிட்ட அட்வான்ஸ் கொடுத்துட்டேன்…” என்று கூற, “அந்த வீடு வேணாம்னு சொல்லிட்டு அட்வான்ஸை திரும்ப கேளுங்க… தருவாங்க இல்லை” என்ரு ராதிகா கேட்கிறாள்.

பாக்யா அதிர்ச்சியுடன், சரி என்று கூறுகிறாள். பிறகு, தாத்தா என்ன என்று கேட்க, “ராதிகா அந்த வீடு வேணாம்னு சொல்றாங்க” என்று பாக்யா சொல்கிறாள். இதுதான் சமயம் என்று கோபி இதற்குதான் நான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் என்று கூறுகிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Baakiyalakshmi Serial Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment