scorecardresearch

Vijay TV Serial: ‘நல்லா சமைச்சு என் பெயரைக் காப்பாத்துங்க’ பாக்யாவிடம் கெஞ்சிய இனியா

“சாந்தி ஒத்துழைப்பு தரலனு நீங்க போய் ஏதாவது சொன்னா, பிரின்சிபால் சின்ன பிள்ளை மாதிரி நீங்க குற்றம் சொல்ற மாதிரி நினைச்சுப்பாங்க. எப்படியாவது நல்லா சமைச்சு என் பெயரை காப்பாத்திடுங்க அம்மா” என்று இனியா பாக்யாவிடம் சொல்லிவிட்டு செல்கிறாள்.

baakiyalakshmi, baakiyalakshmi serial, iniya asks mom please cook with tasty, பாக்கியலட்சுமி, ஜெனிஃபர், இனியா, செல்வி, சாந்தி, jeniffer, selvi, iniya, chezhiyan, bakya, tamil tv serial news, vijay tv, baakiyalakshmi today episode

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடைபெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் இன்று சமைப்பதற்காக இனியாவின் பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கே ஏற்கெனவே வழக்கமாக சமையல் செய்துகொண்டிருந்த பள்ளி உதவியாளர் சாந்தி தனக்கு சமையல் ஆர்டர் கிடைக்காததால், சமைக்க வந்திருக்கும் பாக்யாவுக்கு இடையூறு செய்து சமையலைக் கெடுக்க வேண்டும் என திட்டமிடுகிறாள். பாக்யா சமைக்க வந்திருப்பதைப்பிடிக்காத சாந்தி, அவர்கள் கேட்பதற்கு எல்லாம் எதிர்த்து பேசுகிறாள்.

பள்ளியில் பிரின்ஸிபாலிடம் சைவம் சமைக்கனுமா அசைவம் சமைக்கனுமா என்று கேட்காமல் விட்டுவிட்டோமே என்று நினைத்த பாக்யா அதை சாந்தியிடம் போதும், அதைப்பற்றி எல்லாம் நீ அங்க கேட்ருக்கனும். எங்கிருந்தோ வந்து என் உயிரை எடுத்துக்கிட்டு என வெடுக்கென கடுப்பாக பேசுகிறாள்.

இதையடுத்து, ஜெனிஃபர் பிரின்சிபாலிடம் சென்று என்ன சமைக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு வருகிறாள். திரும்பி வரும் ஜெனிஃபர், “பிரின்ஸிபால் அசைவம் சமைக்க சொல்லிட்டாங்க. ஆனா எல்லாத்தையும் சாந்தி கிட்ட கேட்க சொல்றாங்க… தேவையான பொருள், அதை வாங்குவதற்கு தேவையான பணத்தை எங்கே வாங்கனும் போன்ற எல்லாமே சாந்தி கிட்ட கேட்க சொல்றாங்க” என்று கூறுகிறாள்.

அதன்பிறகு பாக்யா, சமையலுக்கு தேவையான பொருட்கள் எங்கே இருக்கிறது என்ற விவரங்களை சாந்தியிடம் சென்று கேட்கும் போது, “எனக்கு கேண்டின்ல வேலை இருக்கு. அதை வரை வெயிட் பண்ணுங்க போயிட்டு வர்றேன்” என சொல்கிறாள். அதற்கு பாக்யா, “சமைக்குற இடத்தையாவது காட்டுங்கள் என்று கூற, கடுப்பான சாந்தி, “அதான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல… என் உயிரை வாங்காதீங்க” என்று கூறிவிட்டு செல்கிறாள். சாந்தி அவங்களுக்கு வேற வேலை இருக்கிறது என்று கூறியதை பாக்யா, ஜெனிஃபரிடமும் செல்வியிடமும் கூறுகிறாள். இதைக் கேட்ட செல்வி, “வாங்க அக்கா நம்ம போகலாம்” என சொல்கிறாள். இதற்கு ஜெனிஃபர், “வந்துட்டு உடனே கிளம்புனா நல்லா இருக்காது, பிரின்சிபால்கிட்ட போய் நம்ம நடந்ததை சொல்லலாம்” என்று கூறுகிறாள்.

அப்போது, பிரேக் டைமில் அங்கே வரும் இனியா, “சாந்தி ஒத்துழைப்பு தரலனு நீங்க போய் ஏதாவது சொன்னா, பிரின்சிபால் சின்ன பிள்ளை மாதிரி நீங்க குற்றம் சொல்ற மாதிரி நினைச்சுப்பாங்க. அவங்க வர்றேன்னு சொல்லி இருக்காங்கள்ள வெயிட் பண்ணுங்கம்மா, எப்படியாவது நல்லா சமைச்சு என் பெயரை காப்பாத்திடுங்க அம்மா” என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

இதையடுத்து, செல்வி, “அக்கா நமக்கு சாயந்திரம் வரைக்கும் டைம் இருக்குல, வெயிட் பண்ணுவோம்” என சொல்கிறாள்.

இதனிடையே, பாக்யாவின் வீட்டில் தாத்தா பாட்டியின் துணியை துவைத்து காயப்போடுகிறார். பாட்டி வந்து துணியை இனிமேல் நீங்களே துவையுங்கள் என்று கூறுகிறார். அப்போது, பாக்யாவின் வீட்டுக்கு ஜெனிஃபரின் ஜோசப்பும், மரியமும் ஜெனிஃபரைப் பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் பாக்யா என கேட்கும் போது, இனியா படிக்கிற ஸ்கூலுக்கு கேட்டரிங் ஆர்டர் கிடைச்சு இருக்கு, அதுக்கு போயிருக்கா என தாத்தா சொல்கிறார்.

அப்போது ஈஸ்வரி பாட்டி, ஜெனியும் அவளுடன் சென்று இருப்பதாக சொல்கிறாள். “பாக்யாவோட பிசினஸ்ல ஜெனி இப்போ ஒரு பார்ட்னர் மாதிரி. அவ எங்க போனாலும் ஜெனியும் அவ கூடவே போயிருவா” என பாட்டி சொல்கிறாள்.

அப்போது அங்கே வரும் செழியன் மாமியார், மாமனாரிடம், “இதை வச்சு எங்க ரெண்டு பேருக்கும் இடையில் அப்பப்ப சண்டை கூட வருது…” என சொல்கிறான். இதையடுத்து, ஜோசப்பும், மரியமும் கிளம்பும் போது, அவர்களை வழியனுப்ப செழியனும் வெளியே சொல்கிறான்.

அப்போது அவர்கள் செழியனிடம், “ஜெனிக்கு இந்த வேலை எல்லாம் செஞ்சு பழக்கம் இல்லை. இந்த வெயில்ல அவ அடுப்பு முன்னாடி நிற்குறது எல்லாம் அவளால முடியாது” என சொல்கிறார்கள். இதற்கு செழியன், “நானும் வேணாம்னுதான் சொன்னேன். அம்மா கூட அவளை வீட்ல இருக்க சொன்னாங்க. அவதான் அம்மா எங்க போனாலும், நானும் போவேன்னு சொல்லிட்டு போயிட்டா” என சொல்கிறான். ஏதாவது மாப்பிள்ளை தவறாக நினைத்துக்கொள்ளலாம் என்று உணர்ந்த அவர்கள், “சொல்லணும் தோணுச்சு, எதுவும் தப்பா எடுத்துகாதிங்க” என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

இதனிடையே, பாக்யாவும் ஜெனிஃபரும் சமையலுக்கு தேவையான லிஸ்ட் எடுத்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வரும் சாந்தி, “நீங்க என்ன இன்னும் சமைக்க ஆர்ம்பிக்கலயா?” என கேட்கிறாள். இதற்கு பாக்யா, “நீங்க தான் இன்னும் சமைக்குற இடமே காமிக்கலையே” என சொல்கிறாள். அதன்பிறகு சாந்தி, அவர்களை சமைக்கும் இடத்திற்கு கூட்டி செல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

நாளைய எபிசோடில், பாக்யா சமைக்கப்போன இடத்தில் புது வில்லியாக வந்த சாந்தியை எப்படி தெறிக்க விடறாங்கனு பாருங்க.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial today episode iniya asks at bakya please cook tastily