Vijay TV Serial: பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், நடக்கிற கதையை சுவாரஸியம் குறையாமல் இங்கே காணலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், எழில் தனது சகோதரன் செழியனை தனியாக அழைத்து வருகிறான். அவனிடம் அமிர்தா இன்று தன்னை பார்த்து பேசியதை பற்றியும், அவளுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளையும் செழியனிடம் சொல்கிறான். இதைக் கேட்டுக்கொண்ட செழியன், “அப்போ உனக்கு அமிர்தா மேல காதல் இல்லை. வெறும் பிரெண்ட்ஷிப் மட்டும் தானா?” என்று கேட்கிறான். அதற்கு எழில், “அந்த பொண்ணுக்கு வெறும் 21 வயசு தான்டா” என எழில் சொல்கிறான். எழிலின் பதிலைக் கேட்ட செழியன் “அப்போ ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை லவ் பண்ண போறியா?” என கேட்டு எழிலை திகைக்க வைக்கிறான்.
அதற்கு எழில், “அவங்க எல்லாத்தையும் ரொம்ப மெச்சூரா டீல் பண்றாங்க. அவங்க வேலை பார்த்து படிச்சு, மாமியார் மாமனாரா பார்த்துக்கிட்டு இருக்காங்க… அதனால, அவங்களுக்கு ஏதாவது ஒரு விதத்துல சப்போர்ட்டா இருக்கணும்னு தோணுதுடா… ஒரு நல்ல பிரெண்ட்டாவாது இருக்கணும்டா…” என்று சொல்கிறான்.
எழில் பதிலைக் கேட்ட செழியன், “எனக்கு ஒன்னு புரியுது. நீ அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட… நம்ம குடும்பத்துக்கு இது செட் ஆகாது. இப்பவே நிறுத்திக்கோ…” என்று சொல்கிறான். ஆனால், செழியனின் கம்மெண்ட்டைப் பொருட்படுத்தாமல், “எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி ஆசை இல்லை. ஆனால், அப்படி ஒரு ஆசை வந்தா கண்டிப்பா லவ் பண்ணுவேன்டா.. என்று எழில் கூறுகிறான்.
இதையடுத்து, பாக்யா, ராதிகா வீடுவாங்குவதற்காக அவளிடம் டாக்குமெண்ட்களை காட்டுவதற்காக, சுந்தரி வீட்டிற்கு சென்று வீடு சம்பந்தமான டாக்குமெண்ட்களை வாங்கி வருகிறாள். அப்போது, அங்கே இருக்கிற கோபி, “இதுல ஏதாவது பிரச்சனை வந்தா, நீதான் மாட்டுவ, நீ நினைக்குற மாதிரி, வெறுமனே பணத்தை கொடுத்து வீடு வாங்குற விஷயம் இல்லை இது” என எச்சரிக்கிறான்.
தனது வீடு பக்கத்திலேயே ராதிகா வீடு வாங்கி குடி வந்துவிட்டால் ராதிகாவுடன் இருக்கும் தொடர்பு பாக்யாவுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்துவிடுமோ என்று கோபி பயப்படுகிறான்.
அந்த நேரத்தில், அங்கே இருக்கிற எழில், “இதுல என்ன பிரச்சனை வரப்போகுது… அதான், எல்லா டாக்குமெண்ட்டையும் அம்மா வாங்கிட்டு வந்துட்டாங்களே… அதெல்லாம் செக் பண்ணிட்டு தான வீடு வாங்க போறாங்க” எனக் கூறி கோபியின் எச்சரிக்கை உடைக்கிறான்.
இதற்கு கோபி, “இவ்வளவு பணம் செலவு பண்ணி வீடு வாங்க போறாங்க… ஏதாவது சிக்கல்ல முடியப் போவுது” என மேலும் பயமுறுத்துகிறான். இதைக் கேட்டு ஈஸ்வரி, “பாக்யா, கோபிதான் இவ்வளவு சிக்கல் இருக்குன்னு சொல்றான்ல. நீ ஏன்மா ரிஸ்க் எடுக்குற” என சொல்கிறாள். அதற்கு எழில், “அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராதும்மா…” என்று பாக்யாவுக்கு சமாதானம் கூறி தைரியம் அளிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து பாக்யாவிற்கு போன் பண்ணும் ராதிகா, அட்வான்ஸ் பணம் கொடுப்பதற்கு அக்கெளண்ட் நம்பர் அனுப்பும்படி கேட்கிறாள். அப்போது பாக்யா, வீட்டு டாக்குமெண்ட் வாங்கிட்டு வந்த விஷயத்தை கூறி அதை எழிலிடம் இருந்து வாட்சப்பில் அனுப்ப சொல்கிறாள்.
பாக்யா சொன்னதைக் கேட்டு எழில், வீட்டு டாக்குமெண்ட்களை செல்போனில் போட்டோ எடுத்து ராதிகாவுக்கு அனுப்புகிறான். அதனுடன், அக்கெளண்ட் நம்பரையும் அனுப்புகிறான்.
இதையடுத்து, கோபி, ராதிகாவிற்கு போன் பண்ணும்போது அவனிடம் வீடு பார்த்ததையும் அட்வான்ஸ் பணம் அனுப்பியதையும் கூறுகிறாள்.
கோபி மாட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் ராதிகவிடம், “வீட்டை பற்றி எதுவும் விசாரிக்காமல், டாக்குமெண்ட்ட சரி பண்ணாம அட்வான்ஸ் கொடுத்து இருக்க” என சொல்லி சண்டை போடுகிறான். இதற்கு ராதிகா, “நான் அந்த டாக்குமெண்ட் காப்பி எல்லாம் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். நீங்களே ஒரு வக்கீலை நீங்களே வைச்சு செக் பண்ணுங்க…” என சொல்கிறாள். ராதிகாவுடன் பேசி முடித்ததும் கோபி எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று புலம்புகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
இனி அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில், எழிலுக்கு அமிர்தா மீது காதல் மலருமா? கோபிக்கு ராதிகாவுடன் இருக்கும் தொடர்பு பாக்யாவுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிய வருமா என்பதைக் காணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.