பாக்யாவுக்கு திடீர் நெஞ்சுவலி... அமிர்தா கண்டுபிடித்த உண்மை... அவமானத்தில் கோபி

ராதிகா பாக்யாவுக்கு கல்யாணம்னா நீங்க ஏன் பதட்டம் ஆகுறீங்க, அப்போ பாக்யா மேல இன்னும் உங்களுக்கு அன்பு இருக்கு என்று ராதிகா சொல்கிறார்

ராதிகா பாக்யாவுக்கு கல்யாணம்னா நீங்க ஏன் பதட்டம் ஆகுறீங்க, அப்போ பாக்யா மேல இன்னும் உங்களுக்கு அன்பு இருக்கு என்று ராதிகா சொல்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்து என்பதை பார்ப்போம்.

Advertisment

ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கும் கோபி பாக்யாவுக்கு கல்யாணம் என்று சொல்ல ராதிகா அதை நம்பாமல் மறுக்கிறார். ஆனால் கோபி உண்மையாவே பாக்யாவுக்கு கல்யாணம் தான் என்று சொல்ல எங்க அப்பா அம்மா நாங்க சம்மந்தி ஆக போகிறோம் என்று சந்தோஷமாக இருப்பதாக சொல்லி புலம்புகிறார்.

இதை பார்த்த ராதிகா பாக்யாவுக்கு கல்யாணம்னா நீங்க ஏன் பதட்டம் ஆகுறீங்க, அப்போ பாக்யா மேல இன்னும் உங்களுக்கு அன்பு இருக்கு என்று சொல்ல, அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல அப்போலே இல்ல இப்போ எப்படி வரும் என்று சொல்லும்கோபி என் மனசு முழுக்க நீதா சொல்லம் இருக்க என்று சொல்லிவிட்டு தூங்குகிறார்.

அப்போது கோபி கனவில் பாக்யா பழனிச்சாமிக்கு காபி கொடுப்பது போல் கனவு வருகிறது. உடனடியாக அலறி அடித்துக்கொண்டு எழும் கோபி கனவா என்று பழனிச்சாமியை திட்டிக்கொண்டே தண்ணீல் பாட்டிலை பார்க்கிறார். அதில் தண்ணீர் இல்லாததால் கீழே கிச்சனுக்கு தண்ணீர் எடுக்க போகிறார். அப்போது ஹாலில் பட்டுப்புடவையுடன் தலை நிறைய பூ வைத்துக்கொண்டு தூங்கும் பாக்யாவை பார்த்து புலம்புகிறார்.

Advertisment
Advertisements

சடனாக பாக்யா எழுந்திருக்க கோபி அலறி அடித்துக்கொண்டு நான் தான் என்று சொல்கிறார். தண்ணி கிச்சனில் இருக்கு உங்களுக்கு தெரியாதா என்று பாக்யா அதட்ட உடனடியாக தண்ணி எடுத்துக்கொண்டு கோபி மேலே சொல்கிறார். அங்கு திடீரென எழுத்து உட்கார்ந்திருக்கும் ராதிகாவை பார்த்து கோபி பயப்படுகிறார். பாக்யாவுக்கு கல்யாணம்னு சொல்றது உங்களாக ஏத்துக்க முடியல அப்படித்தானே என்று ராதிகா கேட்கிறார்.

அதற்கு கோபி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அவ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்கென்ன என் மனசு முழுக்க நீதா இருக்க அனுமார் மாதிரி என் மனதை கிழித்து காட்டினால் அதில் ராதிகா என்றுதான் இருக்கும் என்று சொல்கிறார். எனக்கு டயார்டா இருக்கு நாளைக்கு ஆபீஸ் போகனும் என்று சொல்லி கோபி தூங்கிவிடுகிறார். அடுத்த நாள் காலை அனைவருக்கும் பாக்யா டிபன் கொடுக்கிறார். அந்த நேரத்தில் எழில் அமிர்தாவிடம் காபி சொல்ல அதை கேட்டு பாக்யா நெஞ்சை பிடித்துக்கொண்டு ஐயோ நெஞ்சு வலிக்குது என்று சொல்கிறார். அமிர்தா எழில் இருவரும் என்னாச்சு என்று கேட்க என்கிட்ட காபி கேட்ட என் பையன் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிவிட்டான் என்று சொல்கிறார்.

இதை கேட்டு நடிப்பு என்று கண்டுபிடித்துவிடுகிறார். அதற்கு அமிர்தா இப்போ வந்த எனக்கு கூட தெரியும் நீங்க இந்த மாதிரி தப்பா யோசிக்க மாட்டீங்கனு உங்க பையனுக்கு நீங்க இப்படி யோசிக்க மாட்டீங்கனு தெரியாதா? என்று அமிர்தா கேட்கிறார். அதன்பிறகு கோபி பழனிச்சாமி வீட்டுக்கு செல்கிறார். வீரமாக செல்லும் கோபி அங்கு வாசலில் நிற்கும் பாடிகார்டை பார்த்து பயப்படுகிறார். அதன்பிறகு பிஸினஸ் விஷயமாக பழனிச்சாமியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் கோபி.

உள்ளே சென்று பழனிச்சாமியை பார்க்கும் கோபி நீங்க எதுக்கு என் மனைவிக்கிட்ட அடிககடி பேசுறீங்க என்று கேட்க, யார் உங்க மனைவி நான் பார்த்ததே இல்லையே என்று பழனிச்சாமி சொல்ல பாக்யாவைத்தான் சொல்கிறேன் என்று கோபி சொல்கிறார். அதற்கு பழனிச்சாமி நாங்க க்ளாசில் ஒன்னா படிக்கிறோம். நாங்க ப்ரண்ஸ் பேசாமல் எப்படி இருக்க முடியும் என்று கேட்கிறார்.

அதெல்லாம் இருக்கட்டும் பெண் பார்க்க எதுக்கு வந்தீங்க என்று கோபி கேட்க ஒரு வீட்டில் பெண் இருந்த பார்க்க வரத்தான் செய்வாங்க அதுவும் அழகான பொண்ணா இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: