Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தனது மனைவி பாக்யாவை ஏமாற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் ராதிகாவுடன் காதலை வளர்த்து துரோகம் செய்த நிலையில், இருவருக்கும் விவகாரத்து பெற்ற பிறகு, குடும்பத்தினர் கோபியை மன்னிக்கிறது ஆனால், பாக்யாவுக்கு வில்லி பட்டம் கொடுக்கிறது. இது என்ன நியாயம்?
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. கதை ரொம்ப சிம்பிள், ஆனால், குடும்ப உறவுகளில் நிலவும் ஒரு முக்கியமான சிக்கலை இந்த சீரியல் பேசுவதால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
குடும்பமே உலகம் என்று வாழும் இல்லத்தரசி பாக்கியலட்சுமி என்கிற பாக்யா. கணவன் கோபி. பாக்யா பள்ளிப் படிப்பு மட்டுமே படித்தவள். செழியன், எழில் என வளர்ந்த மகன்கள், பள்ளிக்கூடம் படிக்கும் மகள் இனியா. மூத்த மகன் செழியனின் மனைவி ஜெனி. மாமனார் ராமமூர்த்தி, மாமியார் ஈஸ்வரி என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். பாக்யா இல்லத்தரசி மட்டுமல்ல கணவன் மாமியார் எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறாள்.
கோபி படித்த நாகரிகமான தனக்கு எதுவுமே தெரியாத பாக்யாவைக் கல்யாணம் செய்துவைத்துவிட்டார்கள் என்று அவளுடன் இத்தனை ஆண்டுகாலம் தாமரை இலை நீர் போல ஒட்டி ஒட்டாமல் வாழ்ந்துவிட்டான். இந்த சூழ்நிலையில்தான், தனது கல்லூரி கால காதலி ராதிகாவைப் பார்த்து காதலிக்கிறான். ராதிகாவும் பாக்யாவும் தோழிகள் என்று தெரிந்தும் காதலை வளர்த்து திருமணம் வரை செல்கிறது. பாக்யாவை அவளுக்கே தெரியாமல் விவாகரத்து செய்ய நீதிமன்றம் அழைத்துச் செல்கிறான் கோபி.
இதனிடையே கோபி - ராதிகா உறவு பாக்யாவுக்கு தெரியவந்து குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. கோபி தன்னை விவாகரத்து செய்வதையும் அறிகிறாள். ராதிகா - கோபி உறவு தெரியவந்ததும் பாக்யா தனது கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கிறாள். மாமனார், மாமியார், மகள், மகன் என யார் சொல்லியும் கேட்காமல், கணவன் செய்த துரோகத்தால், பாக்யா தனது சுயமரியாதைதான் முக்கியம் என்று விவாகரத்து செய்கிறாள். மற்றொரு பக்கம் கோபி காதலி ராதிகாவுடன் வாழவும் திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறான்.
கோபி இவ்வளவு காலம் படிக்காத உன்னோடு வாழ்ந்தேன். இப்போது என்னையே டைவர்ஸ் செய்கிறாயா என்று கொந்தளிக்கிறான். டைவர்ஸ்க்கு பிறகு இந்த வீட்டில் அடியெடுத்து வைக்ககூடாது என்று கூறுகிறான்.
பாக்யாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் கோபி உறுதியாக இருக்கிறார். வீட்டில் இருக்கும் ஜெனி, இனியா, ஈஸ்வரி பாட்டி, செழியன் என எல்லோரும் பாக்கியாவிடம் கெஞ்சுகின்றனர். ஆனால் கோபி எல்லோரையும் தடுக்கிறார்.
இந்த வீட்டில் பாக்கியாவின் சொந்த உழைப்பில் வாங்கிய ஒரு பொருள் கூட இல்லை என கோபி அசிங்கப்படுத்துகிறார். ஆனால், பாக்யா எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறார். பாக்யா எந்த பதிலும் பேசமால், தனது ட்ரெஸ்களை எடுக்க பாக்யா ரூமுக்கு செல்கிறார். இனியா அழுது கெஞ்சுகிறார். வீட்டை விட்டு போக வேண்டாம் என்கிறார். ஆனாலும், பாக்கியா தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் எழில் மீது கோபத்தை திருப்புகிறார்கள். எழில் சப்போர்ட்டால் தான் பாக்யா இப்படி செய்வதாக கூறுகின்றனர்.
பாக்கியா எங்க வீட்டில் இருந்து விடுவாரோ என்ற கோபி மனதுக்குள் நினைத்து பயப்படுகிறான். கோபி பாக்யாவை தொடர்ந்து அசிங்கபடுத்துகிறான். ஈஸ்வரி பாட்டி, ராமமூர்த்தி தாத்தா என எல்லோரும் கோபி செய்த தவறை மன்னித்து விடுகிறார்கள். ஆனால், பாக்யா டைவர்ஸ் செய்தது தான் தவறு என்கிறார்கள். இதற்கு நடுவே, கோபி, எல்லாம் இந்த செல்வியால்தான் வந்தது என்று வேலைக்காரி செல்வியை இழுக்கிறான். ஆனால், செல்வி சரியான பதிலை கொடுக்கிறார்.
பாக்யா வீட்டை விட்டு வெளியே போகும் வரை இனியா கெஞ்சுகிறாள். அம்மா இல்லாமல் இந்த வீட்டில் இருக்க முடியாது என்கிறாள். ஆனால், பாக்யாவே வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்தாலும் கோபி பாக்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஆனால், பாக்யா தனது சுயமரியாதைக்காக எடுத்த இந்த முடிவில் உறுதியாக இருக்கிறாள். பாக்யா துணிகளை எடுத்து கொண்டு தன்னுடைய கேட்டரிங் ஆஃபிஸுக்கு புறப்படுகிறாள்.
கோபி தனது மனைவி பாக்யாவை ஏமாற்றிவிட்டு ராதிகாவுடன் காதலை வளர்த்து துரோகம் செய்திருக்கிறான். ஆனால், குடும்பத்தினர், கோபியை மன்னித்துவிட்டு, விவாகரத்து கொடுத்த பாக்யாவுக்கு வில்லி பட்டம் கொடுத்து யு டர்ன் அடிப்பது என்ன நியாயம்? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.