பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற ரோலில் நடித்து வருபவர் நேஹா. ராதிகாவுன் சீரியலில் நடித்துள்ள நேஹா சத்யராஜூவுடன் ஜாக்சன் துரை படத்தில் நடித்திருப்பார்.
பாக்கியலட்சுமி தொடரில் இவரின் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை யாராலும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. அப்பா அம்மா இருவரும் பிரிந்த பிறகு அப்பாவிடம் கோபப்பட்ட இனியா, பள்ளியில் செய்த தவறுக்காக அம்மா திட்டியதால் மீண்டும் அப்பாவிடம் சென்றுவிட்டார். இப்போது அபபாவும் திட்டியதால் மீண்டும் அம்மாவிடம் வந்துவிட்டார்.

இதனால் அடுத்து இவரின் கேரக்டர் எப்படி செல்லும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நேஹாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறுவயது புகைப்படத்தில் செம கியூட்டாக இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“