Baba Movie Re Release Work going On Rajinikanth Finish His Dubbing Work டிஜிட்டல் முறையில் தயாராகும் பாபா : டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த் | Indian Express Tamil

டிஜிட்டல் முறையில் தயாராகும் பாபா : டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

டிஜிட்டல் முறையில் தயாராகும் பாபா : டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் தயார் செய்து வெளியிடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரா ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் பாபா. ரஜினிகாந்த கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மனிஷா கொய்லராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படத்தில் ரஜினிகாந்தின் பாபா முத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாபா படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் டிஜிட்டல் முறையில் புதுப்பொலிவுடன் வெளியிட உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு வரும் இந்த படத்தில் சில காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங் செய்ய வேண்டி இருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். அவர் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baba movie re release work going on rajinikanth finish his dubbing work