நடிகர் பப்லு ப்ரித்விராஜ், ’இனி வாழக்கையில் தனது தனிப்பட்ட விஷயத்தை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
நடிகர் பப்லு ப்ரித்விராஜ் சமீபத்தில் ’அனிமல்’ படித்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இவர் தனது இளமைக்காலத்திலேயே சினிமாவில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் இவருக்கு வழங்கப்படவில்லை. சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் அவர் சென்ற வருடம் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெற்று தனியாக வாழந்து வந்தார். தொடர்ந்து அவர் ஷீத்தல் என்பவருடன் காதலில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது. இருவரும் பிரிந்துவிட்டீர்களா? என்ற கமெண்டுக்கு ஷீத்தல் லைக் செய்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பப்லு ப்ரித்விராஜ் கூறுகையில் “ நான் வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தை இனி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள மட்டேன். எனது வாழ்வைப் பற்றி கேலி, கிண்டல் செய்ய நானே ஏன் வழி கொடுக்க வேண்டும். இந்த வயதிலும் என்னை அனைவரும் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இனியும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை வெளியே கூறி அவனமானத்தை தேடிக்கொள்ள மாட்டேன். முன்பு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன். ” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“