பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியலில் சக்தி என்ற குழநதை நட்சத்திரமாக வலம் வந்தவர் கிருத்திகா.
இவர் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனதாக்கினார். இந்தச் சீரியலில் இவரது நடிப்புத் திறமையை பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் பேபி கிருத்திகா தற்போது பெரிய பொண்ணாக காணப்படுகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவை சரளா போன்று பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், கோவை சரளாா போல அச்சு அசத்தலாக பேசி நடித்துள்ளார். இதற்கு பலரும் லைக் செய்து வருகின்றனர். பேபி கிருத்திகாவின் நடிப்பு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“