Baby Manasvi Casting in Darbar: குழந்தை நட்சத்திரமாக இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்ததற்காக பிரபலமான பேபி மானஸ்வி ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் அதே போன்ற பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் 25 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திரையில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் இது. அதே நேரத்தில் முருகதாஸ் இந்த படத்தின் மூலம் 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகை நயன்தாராவை தனது படத்தில் இயக்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடத்ததற்காக பிரபலமான பேபி மானஸ்வி தர்பாரில் அதே போன்ற பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, ஒரு பாடல் காட்சி படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஜெய்ப்பூரில் இருந்தார்.
தர்பார் படத்தில் 25 ஆண்டுகளுகுப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் திரையில் தோன்ற உள்ளார். இது இயக்குனர் முருகதாஸ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் முதல் படம். அதே நேரத்தில், இயக்குனர் முருகதாஸ் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை நயன்தாராவை தனது படத்தில் இயக்குகிறார். இருவரும் கடைசியாக 2005 ஆம் ஆண்டு கஜினி படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி, பிரதிக் பப்பர், தலிப் தஹில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். நிவேதா தாமஸ், நவாப் ஷா, யோகி பாபு, ஸ்ரீமான் மற்றும் ஜடின் சர்னா ஆகியோ துணை பாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பார் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த 2.o திரைப்படத்துக்கு அடுத்து லைகா நிறுவனம் இந்த தர்பார் படத்தை தயாரிக்கிறது.