பாக்யலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ், தனது வாழ்க்கையில் நடந்த துயரம் பற்றி பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குடும்த்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றன. டிஆர்பி ரேட்டிங்கிலும் பாக்யலட்சுமி சீரியல் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது
இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் இல்லத்தரசிகள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், கோபி கேரக்டரை கடுமையா விமர்சித்து வருகினறனர். சீரியலில் தனது வில்லத்தனத்தை காட்டும் கோபியை சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இதை பார்த்து கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் பலமுறை அது சீரியல் ரியல் லைஃப் இல்லை என்று விளக்கம் கொடுத்தாலும் மக்கள் அவரை கோபியாகவே பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல் இளைஞர்கள் மத்தியில் நடிகர் சதீஷ் தலைவன் கோபி என்ற பெயரை வாங்கி வைத்துள்ளார். சீரியலில் கோபி கெட்டவர் என்றாலும் அவர் செய்யம் சின்ன சின்ன முகபாவனைகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது கோபி ராதிகாவுடன் பழகுவது தெரிந்து பாக்யா வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பாக்யலட்சுமி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பெற்றுள்ளது. பாக்யா இப்போது வெளியில் சென்றுவிட்டதால், கோபி அடுத்து என்ன முடிவு செய்வார்? ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் பாக்யாவுக்கு இருக்கும் ஆதரவு ரசிகர்கள் மத்தியில் பெருகியிருந்தாலும் தலைவன் கோபியின் அடுத்த ஆட்டம் ரெடியாகும் பாருங்க என்று இளைஞர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் தனது வாழக்கையின் துயரத்தை பற்றி கூறியுள்ளது அனைரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் பேசும் சதீஷ், இன்னைக்கு சதீஷ் பேசுறேன். கோபியை மூஞ்சில ஒரு குத்து தூக்கி அவனை குப்பையில போடுங்க. இன்னைக்கு ஒரு முக்கியமான பெண்மணி பத்தி பேசப்போறேன். அவ பேரு தமிழ்., 5 வயதில் தம்பியை இழந்து விபத்தில் பெற்றோரையும் இழந்து ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை ட்ரவுசர் மட்டும் தான் வைத்து இருந்தேன்.
என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்ந்தேன். எனக்கு மொழி பேச சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, எனக்கு பெயர் புகழ் கொடுத்து இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான். என்னை பொறுத்தவரைக்கும் தமிழ் ஒரு மொழி மட்டும் இல்லை. அது கலாச்சாரம். அது ஒரு மதம். அது ஒரு சக்தி. வாழ்க தமிழ் என்று பேசியிருக்கிறார்.
5 வயதில் பெற்றோரை இழந்தேன்.. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்#Baakiyalakshmi #Sathish #Gopi pic.twitter.com/VeYAhz6qk5
— Parthiban A (@ParthibanAPN) July 14, 2022
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமாக என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“