/indian-express-tamil/media/media_files/2025/10/06/dhruv-2025-10-06-16-28-45.jpg)
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படம் இவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்று தந்தது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் 'கர்ணன்', உதயநிதி - வடிவேலு நடிப்பில் 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் கடைசியாக இயக்கிய ‘வாழை’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது, இயக்குனர் மாரிசெல்வராஜ் ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி தீபாவளி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "என் பெயர் துருவ், நான் இதுவரை இரண்டு படங்கள் பண்ணி இருக்கேன். நீங்க அந்த இரண்டு படங்களையும் பார்க்கலைன்னாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா ’பைசன்’ படத்த நீங்க பார்க்கணும்.
நான் இந்த படத்துக்காக என் 100 சதவீத முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கேன். மாரிசெல்வராஜ் சார் இறங்கி சம்பவம் பண்ணிருக்காரு. நீங்க குடும்பத்தோடயோ, காதலியோடயோ, காதலனோடயோ போகலாம், ஆனா நீங்க எல்லாரும் நிச்சயம் இந்த படத்த பாக்கணும்" என்றார். நடிகர் துருவ் விக்ரம் பிரபல நடிகர் விக்ரமின் மகனாவார். இவர் இதுவரை ‘ஆதித்யா வர்மா’, ’மகான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
‘மகான்’ திரைப்படத்தில் விக்ரமும் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருந்தனர். நடிகர் துருவ் விக்ரம் தன் தந்தையை போன்று வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.