பகாசூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தை ரசிகரகர்களுடன் பார்த்த இயக்குனர் மோகன் ஜி, “படத்தின் பாத்திரங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் மோகன் ஜி, இயக்குனர் செல்வராகவன், நட்டி நடிப்பில் இயக்கியுள்ள பகாசூரன் திரைப்படம், இன்று (பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பகாசூரன் திரைப்படத்தை ரசிகரகர்களுடன் திரையரங்கில் பார்த்த இயக்குனர் மோகன் ஜி, “படத்தின் பாத்திரங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம்” என்று என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது: “ரொம்ப சந்தோஷமாக இருக்குது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். நெர்வசாக எல்லாம் இலலி. அப்படி எனக்கு எல்லாம் அமைந்துவிட்டது. எப்படி அமைந்தது, எப்படி தோன்றியது எல்லாம் எனக்கு தெரியவில்லை. எமோஷனலா பேரண்ட்ஸ் எல்லாம் கையைப் புடிச்சு பேசறாங்க. சரியான ஒரு விஷயம் செய்திருக்கிறோம் என்கிற திருப்தி இருக்கிறது. எதற்காக இந்த துறைக்கு வந்தேனோ அதை செய்துகொண்டிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. எனக்கு ஆத்ம திருப்தியாக இருக்கிறது. எங்கெல்லாம் உறைஞ்சுபோய் அமைதியாக பார்ப்பார்களோ அப்படி பார்த்தார்கள். எங்கெல்லாம் ஆரவாரம் செய்து பார்ப்பார்களோ அங்கெல்லாம் ஆரவாரம் செய்து பார்த்தார்கள். பயங்கர ஆரவாரத்தோடு பார்த்தார்கள்.
செல்வராகவன் சாருக்கு இது ஃபர்ஸ்ட் தியேட்ரிகல் ரிலீஸ். நட்டி சாருக்கு சதுரங்க வேட்டைக்குப் பிறகு, பெரிய அப்ளாஸ். எனக்குதான் அப்பப்ப கூஸ்பம்ப்ஸ். ஒரு மாதிரி ஆகிடுச்சு. ஒரு இடத்துல காலேஜ்ல வாத்தியார்கள் மாணவர்களை பாலியல் பலாத்காரம் பண்றது, மாடியில இருந்து குதிச்சு தற்கொலை, இதையெல்லாம் பார்த்துட்டு கடந்து போய்விடுகிறோம். மக்களுக்கு பயங்கர கோபம் இருக்கிறது. ஆனால், இவர்களால் அதற்கு என்ன தீர்வு என்று சொல்ல முடியல. ஒரு இயகுனரா இதற்கு ஒரு தீர்வு சொல்ல முடியும், விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இன்னைக்கு இன்னும் கொஞ்சம் கண்காணிப்பா இருந்தால் இதுமாதிரிலாம் நடக்காது அப்படினு சொல்லனும்னு நினைச்சேன், அதைதான் சொல்லியிருக்கிறேன். நான் மக்கள்கிட்ட கேட்டுக்கிறது, இந்த படத்தில் வருகிற கதாபாத்திரங்களை யார்கூடயும் தொடர்புபடுத்த வேண்டாம். திரௌபதியில் இது நடந்துதான் என்மேல தப்பான முத்திரை விழுந்தது. இது போல எதுவும் தப்பா ஒப்பிடாமல், இதை ஒரு சினிமாவா விழிப்புணர்வு படமா கொண்டாடனும்னு கேட்டுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“