scorecardresearch

திடீரென திருமணம் செய்து கொண்ட பாக்யலட்சுமி சீரியல் நடிகை; ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்!

குக் வித் கோமாளி ரித்திகா எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சி

திடீரென திருமணம் செய்து கொண்ட பாக்யலட்சுமி சீரியல் நடிகை; ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்!

பாக்யலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா, விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

விஜய் டிவியில் மிகுந்த விறுவிறுப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் அம்ரிதா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரித்திகா. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர், விஜய் டிவியின் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார். அதுவும் குக் வித் கோமாளியில் பாலா, இவர் மீது காதலில் விழுந்ததாக கண்டெண்ட்டுக்காக கூறியது முதல், ரியாலிட்டி ஷோக்களில் இருவரின் பெர்ஃபாமன்ஸ் நிச்சயம் இடம் பெற்று வந்தது. தற்போது ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: குழந்தை சாத்விக் அன்சீன் போட்டோஸ்… ரிலீஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

இந்தநிலையில், திடீரென தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார். ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து, ”இறுதியாக… மிஸஸ்.வினு, கடவுளின் ஆசீர்வாதங்களுடன், உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு தேவை,” எனப் பதிவிட்டுள்ளார்.

ரித்திகாவின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. ரித்திகா விஜய் டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வினு என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு குக் வித் கோமாளி அபிராமி, புகழ், ஸ்ருதிகா, கிரேஸ், தர்ஷா குப்தா, சீரியல் பிரபலங்கள் ஸ்ரீதேவி, அக்சய், பவித்ரா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bakiyalakshmi actress rithika marriage photos goes viral