bakiyalakshmi serial actor sathish shooting spot dance video: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் என்னவென்றால் சீரியலில் எப்போதும் டென்சனாக கோபத்துடன் இருக்கும் கோபி, ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடியுள்ளார்.
bakiyalakshmi serial actor sathish shooting spot dance video: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் என்னவென்றால் சீரியலில் எப்போதும் டென்சனாக கோபத்துடன் இருக்கும் கோபி, ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. வங்காள மொழியில் வெளிவந்த ஸ்ரீமாயி சீரியலின் தமிழ் பதிப்பு இந்த பாக்கியலட்சுமி.
Advertisment
அப்பாவி பெண்ணின் கணவன் வேறு ஒரு பெண் வீட்டிற்குச் சென்று வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலின் கதை செல்கிறது. அப்பாவி மனைவி பாக்கியலட்சுமியாக சுசித்ரா நடிக்கிறார். அவரது கணவர் கோபியாக சதீஷ் நடிக்கிறார். சீரியலில் இறுக்கமான மற்றும் டெரரான கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் நிஜத்தில் அப்படி எதிராக இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் சதீஷ் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ வெளியிட்டு வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் என்னவென்றால் சீரியலில் எப்போதும் டென்சனாக கோபத்துடன் இருக்கும் கோபி, ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடியுள்ளார்.
Advertisment
Advertisements
சீரியலில் தனக்கு மகனாக நடிக்கும் விஷால் மற்றும் மகளாக நடிக்கும் நேஹா மேனனுடன் சேர்ந்து சதீஷூம் செம ஆட்டம் போட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சதீஷ் அதில், இந்த மாதிரி ஒரு பொண்ணும் பையனும் இருந்த, ஏன் அப்பனுங்க ஆட மாட்டாங்க , என்றும் பதிவிட்டுள்ளார்.
சதீஷ் சன் டிவியில் ஆனந்தம், கல்யாணப் பரிசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சுஜிதாவுடன் மகாராணி சீரியலிலும் நடித்துள்ளார். இவர், தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களிலும் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil