பாக்யாவுக்கு தோழியான ராதிகா இனி வில்லி: ஆஹா… ட்விஸ்ட் உடைஞ்சு போச்சே..!

நடிகை நந்திதா ஜெனிஃபர், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொல்லப் போய் சீரியலின் ட்விஸ்டையே பொதுவில் உடைத்து தெரியப்படுத்திவிட்டார்.

Bakiyalakshmi Serial, vijay tv serial actress Nanditha Jennifer, பாக்கியலட்சுமி சீரியல், ராதிகா, நந்திதா ஜெனிஃபர், விஜய் டிவி, bakiyalakshmi serial actress Nanditha Jennifer, Nanditha Jennifer video reveals twist, vijay tv, bakiyalakshmi serial radhika character

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கதைநாயகி பாக்யாவுக்கு தோழியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர் தான் சீரியலில் இருந்து ஏன் விலகினேன் என்று விளக்கம் சொல்லப் போய் சீரியலின் ட்விஸ்ட் உடைஞ்சு வெளியே தெரியவந்திருக்கிறது.

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிற பாக்கியலட்சுமி சீரியல். பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த சீரியல் ஒருமுறை டிஆர்பி-யில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்து கவனத்தை ஈர்த்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமிக்கு செழியன், எழில் என இரண்டு வளர்ந்த மகன்களும், பள்ளியில் படிக்கும் இனியா என்ற மகளும் இருக்கிறார்கள். மருமகள் ஜெனிஃபரும் இருக்கிறார். பாக்யாவுக்கு குடும்பம்தான் உலகம். ஓரளவு படித்த பாக்யா, வீட்டில் இருந்தபடியே கேட்டரிங், மசாலா செய்து விற்பனை செய்வது மூலம் ஏதேனும் வருமானம் ஈட்ட முயற்சிக்கிறாள். ஆனால், கணவன் கோபியோ மனைவியை அலட்சியமாக கருதுவதோடு தனது முன்னாள் காதலில் ராதிகா மீது ஆசைப்படுகிறான். ராதிகாவோ திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு கணவனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரிந்து வாழ்கிறாள். கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகுகிறான். ஆனால், பாக்யாவும் ராதிகாவும் தோழிகளாக உள்ளனர்.

கோபி தனது மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவுடன் பழகுகிறார். அதே போல, ராதிகாவுக்கு தனது மனைவிதான் பாக்யா என்று தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் நடிகை ரேஷ்மா ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நந்திதா ஜெனிஃபர் மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைதியாகவும் நல்ல இயல்புகளையும் கொண்ட ஜெனிஃபர் ரசிகர்கள் மத்தில் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்.

இதையடுத்து, நடிகை நந்திதா ஜெனிஃபர், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பதை தனது கணவருடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கு 2 முக்கிய கார்ணங்களைத் தெரிவித்துள்ளார். நந்திதா ஜெனிஃபர் இந்த காரணத்தை சொல்லப்போய்தான் சீரியலின் ட்விஸ்ட் உடைந்து போயிருக்கிறது.

நந்திதா ஜெனிஃபர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்துவிலகியதற்கு முக்கிய காரணம் ஒன்று தனது பர்சனல் விஷயத்திற்காக விலகியதாக தெரிவித்துள்ளார். அந்த நல்ல விஷயம் பற்றி மற்றொரு வீடியோவில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

மற்றொரு காரணம், பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் விரைவில் மாறப்போகிறது. நல்ல கேரக்டராக இருக்கும் ராதிகா கதாபாத்திரம் வில்லி கேரக்டராக மாறப்போகிறதாம். அதனால், இதுவரை நல்ல பெயர் எடுத்து விட்டு, வில்லி கேரக்டரில் நடிக்க விரும்பவில்லை. அதனால், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், நெகடிவ் ரோல் தனது கேரியரை கெடுத்துவிடும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை பாக்கியலட்சுமி சீரியல் பாக்யாவையும் கோபியையும் மையமாக வைத்து நகர்ந்து வந்த நிலையில், கதையில் புதிய ட்விஸ்ட்டாக வில்லி கேரக்டர் வர போகிறது. அதுவும் தோழியாக இருந்த நல்ல பெயர் எடுத்த ராதிகாவே பாக்கியலட்சுமிக்கு வில்லியாக மாறப் போகிறார் என்பது நந்திதா ஜெனிஃபரின் வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

நடிகை நந்திதா ஜெனிஃபர், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொல்லப் போய் சீரியலின் ட்விஸ்டையே பொதுவில் உடைத்து தெரியப்படுத்திவிட்டார். இதனால், பாக்யாவுக்கு தோழியான ராதிகா இனி வில்லியா? ஆஹா ட்விஸ்ட் உடைஞ்சு போச்சே ஜெனிஃபர் என்று சமூக ஊடகங்களில் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bakiyalakshmi serial actress nanditha jennifer video reveals twist of the serial

Next Story
அஜித்தின் வலிமை போஸ்டர் வெளியானது; அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் ரியாக்‌ஷன்ஸ்Ajith, Valimai Motion Poster, Valimai, Thala Ajith, வலிமை, அஜித், வலிமை ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வலிமை போஸ்டர், வலிமை மோஷன் போஸ்டர், அஜித், போனி கபூர், ஹெச் வினோத், வானதி சீனிவாசன், H vinoth, AjithKumar's, Valimai motion poster, BoneyKapoor, Ajithfans crazy, Ajith, Thala Ajith fans, ajith fans, Vanathi Srinivasan comment on Valimai update, valimai update
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com