பாக்யலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. ஒரு இல்லத்தரசி படும் கஷ்டங்களை வெளிப்படுத்துவதாக உள்ள இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மருமகள் ஜெனியாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் சன் டிவியின் கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பின்னர் செம்பருத்தி, சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ்க்கு, சீரியலில் தற்போது அவரது கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா கணேஷ், அவ்வப்போது தனது புகைப்படங்களை, அதில் பதிவேற்றி வருகிறார். இதனால் இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரிய ஆர்மியே இருக்கிறது.
இந்த நிலையில் திவ்யா கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் ஷகீலாவின் மகள் மிலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க திவ்யா கணேஷ், அவருடன் வீடியோவில் பேசி இருக்கிறார். அதில் மிலாவுக்கு திவ்யா கணேஷ் சர்ப்ரைஸ் அளிக்க, அப்போது மிலா, திவ்யா கணேஷ் பிக் பாஸ் செல்ல இருப்பதாக கூறுகிறார். அதற்கு திவ்யா கணேஷும் ஆமா நான் தான் போறேன் என கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, திவ்யா கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. மிலா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதைத் தான் இப்படி இருவரும் மறைமுகமாக பேசியிருக்கிறார்களோ என்னவோ! ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் திவ்யா கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil