New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/jenifer-dance-bakiyalakshmi.jpg)
Vijay tv bakiyalakshmi serial jenifer dance alya sanjeev song video goes viral: ஆல்யா மற்றும் சஞ்சீவின் காத்தாடி பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிபர்; வீடியோ இதோ....
ஆல்யா மானசா – சஞ்சீவ் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நந்திதா ஜெனிபர்.
ஜெனிபர் ஈர நிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் ஜெனிபர் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் சவாலான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளான ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் ஒன்றாக நடித்தார்கள். சீரியலில் நடிக்கும் இருவரும் காதலித்து, இப்போது திருமணமும் செய்துள்ளார்கள்.
இந்த ஜோடிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். ஆல்யாவும் சஞ்சீவும் இணைந்து காத்தாடி என்ற ஆல்பம் பாடலுக்கு நடித்து, அதனை அவர்களது யூடியூப் சேனலில் வெளியிட்டார்கள். அந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த பாடல் இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
தற்போது ஜெனிபர், ஆல்யா மற்றும் சஞ்சீவின் காத்தாடி பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஜெனிபர், அதில் சில பாடல் வரிகளை மறந்து விட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.