bakkiyalakshmi serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ சீரியல். குடும்பத் தலைவியின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில், குடும்பத் தலைவியாக பாக்கியலட்சுமி இருக்கிறார். தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்திற்காக அவர் மிகவும் கஷ்டபடுகிறார். மேலும், தனது திறமையை வெளிகாட்டுவதற்காக பல அவமானங்களை சந்திக்கிறார்.

கணவர் கோபியோ தனது மனைவிக்கு தெரியாமல் பள்ளி தோழியுடன் பழகுகிறார். இதை வீட்டில் யாருக்கும் தெரியாமலும் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மகன் எழிலுக்கு தெரிந்துவிடுகிறது. அவர் அப்பாவை எச்சரிப்பதோடு நிறுத்திவிடுகிறார். அதன்பிறகு கோபியின் அப்பாவுக்கு தெரியவருகிறது.

அவர் கோபியின் தோழி ராதிகாவின் அம்மாவிடம் சென்று சண்டையிடுகிறார். இதனால் கோபிக்கும் அவரது அப்பாவுக்கும் பிரச்சினை வெடிக்க இருவரும் பார்க்கும்போதெல்லாம் முட்டிக்கொள்கின்றனர். இது பாக்கியாவுக்கு மேலும் மன கஷ்டத்தை கொடுக்கிறது.

மறுபுறம் கோபியின் பெண் தோழியான ராதிகா ஏற்கனவே திருமணம் முடிந்து, ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். ராதிகா – கோபி உறவு தெரிந்த ராதிகாவின் அம்மா கோபியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். இருவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? அல்லது வேறேதும் காட்சிகள் அரங்கேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், கோபி மற்றும் ராதிகா தற்போது திருமணம் செய்துகொண்டது போல புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகிறது. இதைப்பார்த்த நமது நெட்டிசன்கள் இந்த மாதிரியான கதையெல்லாம் தேவை தானா? என்று கமெண்ட் செய்து வருகிறன்றனர். சிலரோ இது என்னடா புது ட்விஸ்ட். என்னடா இங்க நடக்குது? என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“