நடிகர் சூர்யா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் நந்தா. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை முனுமுனுக்க வைத்தன.
இந்தப் படத்தில் சூர்யா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவர் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்கள்.
-
நடிகை ஜோதிகா
இந்தப் படம் தொடர்பாக சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நந்தா படத்தில் லைலா நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யா முயற்சித்துள்ளார்.
ஆனால் இதற்கு பாலா சம்மதிக்கவில்லையாம். ஏனெனில் அந்தக் கதாபாத்திரம் இலங்கை தமிழர் என்பதால் லைலாவை அதில் நடிக்க வைத்தாராம் பாலா.
-
நடிகர் சூர்யா
மேலும் ஏன்டா அந்த புள்ளைய காதல் எதுவும் பண்றீயா எனவும் சூர்யாவை பார்த்து பாலா கேட்டுவிட்டாராம். சூர்யாவும், பாலாவும் அண்மையில் வணங்கான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்தப் படத்தில் இருந்து சூர்யா பாதியில் விலகிவிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“