/indian-express-tamil/media/media_files/2025/08/18/rubber-bandhu-2025-08-18-12-16-15.jpg)
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2024-ல் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்ற நடிகர் பாலசரவணன், தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். லப்பர் பந்து மற்றும் இங்க நான்தான் கிங்கு ஆகிய படங்களில் அவரது நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான நடிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக 13 ஆண்டுகளாகக் காத்திருந்ததாகவும், இப்போதுதான் தான் ஒரு 'கிங்' போல உணருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் "ஆர்.சி.பி 18 வருஷமா காத்திருந்ததுபோல எனக்கு இந்த விருதைப் பெற 13 வருஷம் ஆச்சு. நானும் ஆர்.சி.பி மாதிரிதான் காத்திருந்தேன்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, அரங்கத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தனது சினிமா பயணத்தை நினைவு கூர்ந்த பாலசரவணன், ஒரு புரோட்டா மாஸ்டராக இருந்து, பின்னர் 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்' சீரியலில் ஒரு மாணவராக நடித்தது முதல் தனது பயணம் தொடங்கியது என்றார்.
2013-ல் வெளியான குட்டி புலி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலா சரவணன், அதில் நடித்த கிராமத்து நண்பன் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற பல படங்களில் தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தார்.கடைசியாக 2024 ஆம்ஆண்டுவெளியானலப்பர்பந்துபடத்தில்காத்தாடிஎன்றகதாப்பாத்திரத்தில்நடித்துமக்கள்மனதில்இடம்பிடித்தார்.
'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடித்தது தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாகவும், அது அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். தான் நடிப்புத் துறைக்கு வரவில்லை என்றால் ஒரு புரோட்டா கடை வைத்திருந்திருப்பேன் என்று நகைச்சுவையாகச் சொன்னது அனைவரையும் கவர்ந்தது.
இந்த வெற்றிக்கு உதவிய பலருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். 'ரகளையான நண்பன்' படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தனக்கு நகைச்சுவையுடன் முக்கியமான அரசியல் வசனங்களையும் கொடுத்ததாகப் பாராட்டினார். மேலும், 'கனா காணும் காலங்கள்' ஆடிஷனுக்காக உதவிய ரமணன் சார், ஆடிஷனுக்கு அழைத்த ரவிக்குமார் சார், மற்றும் 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்' இயக்குனர் ஜெரால்ட் சார் ஆகியோருக்கு தனது வாழ்க்கையில் முக்கியமான வாய்ப்புகளை வழங்கியதற்காக நன்றி கூறினார்.
கடந்த ஆண்டு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் விருது கிடைக்காதபோது, ஒருநாள் நிச்சயமாக மேடையில் நிற்பேன் என்று தனக்குள் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த விருது, அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.