பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்த பாலாஜி; புதியதகவல்

பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே தான் சினிமாவில் நடித்துள்ளேன் என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளது. பாலாஜி தெரிவித்த இந்த புதிய தகவலால் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

bigg boss, bigg boss season 4, balaji murugadoss, balaji, பிக் பாஸ், பாலாஜி முருகதா, பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்த பாலாஜி, balaji acted a cinema, balaji murugadoss news

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்துவிட்டதாக ஒரு புதிய தகவலைத் தெரிவித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வழக்கம்போல பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டிலை வென்றார். அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் 2வது இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் பாலாஜி தனது முன்கோப உணர்வால் சர்ச்சைக்குள்ளானாலும் அவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானபோது பாலாஜி முருகதாஸ், தான் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றபோதும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த கவனம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகும் திறமையாளர்களுக்கு விரைவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா, முகேன் ராவ், தர்ஷன் போன்றவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளனர். அப்படி, பாலாஜி முருகதாஸுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ், தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஒரு எம்.எம்.ஏ (Mixed Martial Arts) படம் ஒன்றில் நடித்திருப்பதாகவும் தான் அந்தப் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே தான் சினிமாவில் நடித்துள்ளேன் என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளது. பாலாஜி தெரிவித்த இந்த புதிய தகவலால் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Balaji murugadoss says he acted coming before bigg boss

Next Story
‘ஒரு செல்ஃபி போட்டது குத்தமா… அதுக்கு இப்படியா…’ மனோபாலாவை பதறவிட்ட நெட்டிசன்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com