பாரதியும் கண்ணம்மாவும் வாழ ஆரம்பிச்சிட்டாங்க… வெண்பா ரீயாக்ஷன்!

பாரதி கண்ணம்மா சீரியலில், வில்லி வெண்பா சூழ்ச்சி செய்து கணவன் மனைவி பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து வைத்துள்ள நிலையில், இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்க என்பதைக் கேட்டு வெண்பா கோபத்தின் உச்சிக்கு சென்று ரியாக்ஷன் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

barathi kannamma serial, Venba gaund, barathi kannamma compromised, barathi, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், வெண்பா, kannamma, venba, barathi kannamma promo, tamil news, tamil entertainment, vijay tv, barahti kannamma serial promo video

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா சூழ்ச்சி செய்து கணவன் மனைவி பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து வைத்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்க என்பதைக் கேட்டு வெண்பா கோபத்தின் உச்சிக்கு சென்று ரியாக்ஷன் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டி.ஆர்.பி.யில் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் ஓரளவு படித்த நல்ல குணமுள்ள பெண் கண்ணம்மா டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதியை அடைய நினைக்கும் அவனுடைய ஃபிரெண்ட் வெண்பா சதி செய்து சூழ்ச்சியால் இருவரையும் பிரிக்கிறாள். பாரதி தனது மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு விரட்டுகிறான். நிறைமாத கர்ப்பினியான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே போய் எங்கே செல்வது என்று தெரியாமல் பல எபிசோடுகள் நடந்தபோதுதான் இந்த சீரியல் டி.ஆர்.பியில் உச்சம் தொட்டது.

இதையடுத்து, கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது. ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா எடுத்துச் சென்று ஹேமா என்று பெயர் வைத்து வளர்க்கிறாள். பாரதி ஹேமாவை தனது மகளாக நினைத்து வளர்க்கிறான்.

கண்ணம்மா தனது மகளுக்கு சௌந்தர்ய லட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறாள். ஹேமாவும் லட்சுமியும் ஒரு பள்ளியில் படிப்பதன் மூலம் இருவரும் ஃபிரெண்ட் ஆகிறார்கள். கண்ணம்மாவும் பிரியமாகிறாள். சமீபத்தில்தான் கண்ணம்மாவுக்கு ஹேமாதான் தனது 2வது குழந்தை என்பதை தெரிந்துகொள்கிறாள்.

கடந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி, தனது மனைவி கண்ணம்மாவிடம் என்னிடம் இருந்து ஹேமாவை பிரிதுவிடாதே என்று கையெடுத்து கும்பிடுகிறான்.

பாரதியும் கண்ணம்மாவும் நெருக்கமாவதை அறிந்த வெண்பா, பாரதியை கேள்வி கேட்கிறாள். அதற்கு பாரதி எனக்கும் கண்ணம்மாவுக்கும் இடையேயான பிரச்னையில் 3வது நபர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று கூறுகிறான். இதனால், வெண்பா அசிங்கப்பட்டு கடும் கோபத்துடன் செல்கிறாள்.

இந்த சூழ்நிலையில்தான், பாரதி கண்ணம்மா சீரியலின் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரையிலான இந்த வார எபிசோடுக்கான புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கண்ணம்மா செல்லும் ஆட்டோ பஞ்சர் ஆகிவிடுகிறது. அப்போது, ஆட்டோ டிரைவரும் கண்ணம்மாவும் டயர் மாற்றுவதற்காக ஆட்டோவின் ஒரு பக்கத்தை தூக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக பாரதி ஹேமாவுடன் காரில் வருகிறான். இதைப் பார்த்த ஹேமா சமையல் அம்மா கண்ணம்மாவுக்கு உதவலாம் என்று கூறி காரை நிறுத்தி அழைத்துச் செல்கிறாள். பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து உரசிக்கொண்டு ஆட்டோவை தூக்குகிறாள். அந்த நேரம், பார்த்து வெண்பா சீண்டிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் கண்ணம்மா, வெண்பாவுக்கு லோகேஷ் ஷே செய்து மெசேஜ் அனுப்புகிறாள்.

உடனடியாக அந்த இடத்திற்கு வரும் வெண்பா, அங்கே பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து அருகருகே உரசிக்கொண்டு ஆட்டோவை தூக்குவதைப் பார்த்து கோபமடைகிறாள். அப்போது அங்கே வரும் கண்ணம்மாவின் சித்தி பாரதியும் கண்ணம்மாவும் ஏற்கெனவே சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள். உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்வதைக் கேட்டு வெண்பா, கோபத்தின் உச்சத்திற்கு சென்று ரியாக்ஷன் செய்கிறாள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma compromised villi venba gets high shocks and angry

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com