அடடே, பாரதி திருந்திட்டாரு… அப்போ சீரியல் முடியுதா? பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட்

பாரதி கண்ணம்மாவின் லேட்டஸ் புரொமோவைப் பார்த்த ரசிகர்கள், அடடே பாரதி திருந்திட்டாரு, ரெண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், சில ரசிகர்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை அது கனவு சீன் என்று சொல்லி மீண்டும் ஜவ்வாக இழுப்பார் பாருங்கள் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

Barathi Kannamma latest promo, Barathi Changed as good, Barathi feeling for kannamma, Barathi kannamma serial, பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் புரொமோ, பாரதி திருந்திட்டாரு, கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், vijay tv, barathi kannamma today promo, roshni haripriyan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், தனது மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் ஹீரோ பாரதி, எப்போது கண்ணம்மாவுடன் சேர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேலையில், பாரதி திருந்துவதாக ஒரு புரொமோ வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏறப்டுத்தியுள்ளது. ஆனால், இதுவும் வழக்கம் போல கனவு காட்சிதான் என்று சில ரசிகர்கள் விரக்தி தெரிவித்து வருகின்றனர்

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் டாப் 5 சீரியல்களில் தொடர்ந்து முதலிடம் இரண்டாவது இடம் என டாப்பில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலை வக்கிக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரே விஷயம்தான். அது என்னவென்றால், பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேர்வார்கள்? என்பதுதான் அது.

பாரதி கண்ணம்மா சீரியலில், படிக்காத நல்ல குணமுள்ள அறிவான் கண்ணமா, டாக்டர் பாரதியைத் திருமணம் செய்துகொள்கிறாள். பாரதி மீது ஆசைப்படும் அவனுடைய ஃபிரெண்ட் வெண்பா, சதி செய்து பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகத்தை உருவாக்கி பிரிக்கிறாள். பாரதி நிறைமாத கர்ப்பிணியான கண்ணம்மாவை வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மா எங்கே செல்வது என்று தெரியாமல் பல வாரங்களாக நடந்தபோதுதான், ரசிகர்களின் மீம்ஸால் பாரதி கண்ணம்மா வைரலாகி டி.ஆர்.பி-யில் டாப்புக்கு போனது.

அதன் பிறகு, கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா தெரியாமல் எடுத்துச் சென்று ஹேமா என்று பெயர் வைத்து வளர்க்கிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரே குழந்தை பிறந்தது என்று நினைத்து அந்த குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்து வளர்க்கிறாள். ஹேமாவும் லட்சுமியும் ஃபிரெண்ட் ஆகிறார்கள். இந்த சூழலில்தான், கண்ணம்மா தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததை தெரிந்துகொள்கிறாள். பாரதி வீட்டில் எல்லோரும் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பாரதி தனது மனைவி மீது சிறிது அவனுடைய வெறுப்பு குறையவில்லை. இதனால், இப்போதைக்கு, பாரதியும் கண்ணம்மாவும் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று ரசிகர்கள் விரக்தி அடைந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான், பாரதி கண்ணம்மா சீரியலின் லேட்டஸ்ட் புரோமோ வெளியாகி பாரதி திருந்திவிட்டதாக ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல் புரோமோவில், “பாரதியிடம் அவனுடைய ஃபிரெண்ட் ஒருவர், “எங்க அண்ணன் ரொம்ப தங்கமானவன், என்னிக்கு எங்க அண்ணிமேல சந்தேக புத்தி வந்துச்சோ, அன்னையில இருந்து அவங்க வாழ்க்கையே நரகமாயிடுச்சு.” என்று கூறுகிறாள். இதைக்கேட்டு, பாரதி, தானும் அப்படி சந்தேகப்பட்டுவிட்டோமோ என்று சிந்திக்கிறான்.

அப்போது, வெண்பா, பாரதியைப் பார்க்க அவனுடைய ஆஃபீஸ்க்கு வருகிறாள். வெண்பா பாரதி என்ன என்று கேட்க, அதற்கு பாரதி, “கண்ணம்மா ரொம்ப நள்ளவளோ, இத்தனை வருஷமா நான்தான் தப்பா நினைச்சுகிட்டு இருக்கானோ தோணுது.” என்று கூறுகிறான்.

இதைக்கேட்டு ஷாக் ஆகும் வெண்பா, “கண்ணம்மாவை இவன் நல்லவணு நம்ப ஆரம்பிச்சிட்டான், இவனை நம்மலாள தடுக்க முடியாதே” என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள். தொடர்ந்து, தனது அம்மா சௌந்தர்யாவிடம் பேசும் பாரதி, “கண்ணம்மா ஏன் தப்பே செய்யாதவளா இருக்கக் கூடாது. என் பக்கமும் தப்பு இருக்கலாம் இல்லைமா? இத்தனை வருஷமா நான் நம்பிக்கொண்டிருப்பது ஒரு பொய்யான விஷயமா இருக்கலாம் இல்லையா, அவள்கூட மிச்சம் இருக்கிற வாழ்க்கையை சேர்ந்து வாழ்ந்துடலாமேணு, என் உள் மனசு கிடந்து அடிச்சுக்குதுமா” என்று சொல்லி அழுகிறான். இதைக்கேட்டு பாரதியின் அப்பா, அம்மா ரெண்டு பேரும் சந்தோஷப்படுகிறார்கள்.

இந்த புரொமோவைப் பார்த்த ரசிகர்கள், அடடே பாரதி திருந்திட்டாரு, அப்போது சீக்கிரம் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், சில ரசிகர்களும் நெட்டிசன்களும், ஏற்கெனவே பாரதி திருந்துவதாகவும் இருவரும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு அமைவதாகவும் பலமுறை காட்டப்பட்டு பிறகு அடுத்த எபிசோடில் அது கனவு சீன் என்று சொல்லி மீண்டும் ஜவ்வாக இழுப்பார்கள் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். இதனால், பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த புரோமோ நிஜமான காட்சியா, இல்லை கனவு காட்சியா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma latest promo barathi changed as good

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com