ரெட்டை குழந்தை பிறந்தது தெரிஞ்சு போச்சு; கோபத்தில் மாமியாருக்கு போன் போட்ட கண்ணம்மா!

கண்டிப்பாக உனக்கு ரெட்டை குழந்தைதான் என்று டாக்டர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மா கோபத்துடனும் கண்ணீருடனும் தனது மாமியாருக்கு போன் செய்கிறாள். அத்தை நான் ஒன்னு கேட்ட உண்மையை சொல்லனும், எனக்கு ரெட்டை பிறந்துச்சா என்று கேள்வி கேட்கிறாள்.

Barathi Kannamma Serial, Barathi Kannamma latest promo, Barathi Kannamma promo, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா, கண்ணம்மாவுக்கு ரெட்டை குழந்தை பிறந்தது தெரிஞ்சு போச்சு, பாரதி கண்ணம்மா புரோமோ, Kannam comes to know she deliveried twins girl child, Barathi kannamma today twist

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை கன்ணம்மா தனக்கு ஒரு பெண் குழந்தைதான் பிறந்தது என்று நினைத்திருந்த நிலையில், இந்த வாரம் எபிசோடுக்கான புரோவில், கண்ணம்மாவுக்கு ரெட்டை குழந்தை பிறந்தது என்று தெரிவருவதால் கோபத்தின் உச்சிக்கு சென்று மாமியாருக்கு போன் போடுகிறாள், இந்த எதிர்பாராத திருப்பத்தால் ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் முன்னணி சீரியல்களில் ஒன்றாகத் திகழும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சிரீயல் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் நிகழும் சம்பவங்கள் எதிர்பாதார விறுவிறுப்பான திருப்பங்களையும் உறவுகளுக்கு இடையேயான அன்பு, பாசம், கோபம், சண்டை என உணர்வுகளை ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமாக வெளிப்படுத்தி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கதை ரொம்ப சிம்பிள்தான், ஆனால், அது தொட்டிருக்கும் எல்லை மிகப் பெரியது. சித்தி கொடுமையால் துன்புற்றாலும், நல்ல குணமுடைய தைரியமான பெண் கண்ணம்மா பணக்கார வீட்டு டாக்டர் பையன் பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். பாரதியை அடைய முயற்சிக்கும் பாரதியின் தோழி வெண்பா, சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள். கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது வீட்டை விட்டுவிரட்டுகிறான். கண்ணம்மா எங்கே செல்வது என்று தெரியாமல் பல எபிசோடுகள் நடந்துகொண்டே இருந்தாள். அப்போதுதான், நம்முடைய மீம் கிரியேட்டர்கள் கண்ணம்மா நடந்து நடந்து அமெரிக்கா போய்விட்டால், நிலாவுக்கு போய்விட்டாள், செவ்வாய் கிரகத்துக்கு போய்விட்டாள் என்று மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டனர். அதிலிருந்து பாரதி கண்ணம்மா டி.ஆர்.பியில் டாப் கியருக்கு எகிறியது. அப்போதில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

அதன் பிறகு, கண்ண்ம்மாவுக்கு ரெட்டை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா அதில் ஒரு குழந்தையை தெரியாமல் எடுத்துச் சென்று ஹேமா என்று பெயரிட்டு வளர்க்கிறார். கண்ணம்மா தனக்கு ஒரு பெண் குழந்தைதான் பிறந்தது என்று நினைத்து மகள் சௌந்தர்யா லட்சுமியை போராடி வளர்த்து வருகிறாள். சௌந்தர்யாவிடம் வளரும் குழந்தையிடம் பாரதி தனது மகள் என்று தெரியாமலே தந்தை – மகள் என்ற பாசத்துடன் வளர்க்கிறான்.

8 ஆண்டுகளுக்கு பிறகு, ஹேமாவும் லட்சுமியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அந்த பள்ளியில் கண்ணம்மா சமையல் வேலை பார்க்கிறாள். ஹேமா – லட்சுமியின் தோழிகளாகிறார்கள். கண்ணம்மாவும் தனது மகள் என்று தெரியாமல் பாசமாக பழகுகிறார்கள். இது பாரதியின் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்தாலும் பாரதிக்கு தெரியாது. ஒரு நாள் கண்ணம்மா தனது மகளை தன்னிடம் இருந்து பிரிக்கத்தான் திட்டமிட்டு பழகியிருக்கிறாள் என்று சண்டை போடுகிறான். பிறகு, ஹேமாவை வெண்பாவின் ஆட்கள் கடத்திக்கொண்டு போய்விட கண்ணம்மா காப்பாற்றுகிறாள். பிறகு, ஹேமா கண்ணம்மாவுடன் மேலும் நெறுக்கமாகி அவளை பிரிய முடியாமல் உடல்நிலை பாதிக்கப்படும்போது, அவள் வீட்டிலேயே கொஞ்ச நாள் விட்டுவிட்டு வருகிறான். அதே நேரத்தில், லட்சுமி தனது மகள் என்று தெரிந்தால் பாரதி வெறுப்பை காட்டுவான் என்று நினைக்கும் கண்ணம்மா ஹேமாவைப் போல தன்னை சமையல் அம்மா என்று அழைக்கும்படி லட்சுமியிடம் கூறுகிறாள். லட்சுமியும் அப்படியே அழைக்கிறாள். தற்போது, லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்று தெரிந்துபோனதால் பாரதி லட்சுமியை தனது வீட்டில் வைத்திருக்கிறான். கண்ணம்மா இதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறான்.

இந்த சூழலில்தான், விஜய் டிவி ஒருப் பரபரப்பான புரோமோ வீடியோவை வெளியிட்டு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்துக்கான புரோமோவில், கண்ணம்மாவுக்கு ரெட்டை குழந்தை பிறந்தது என்பதை அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மூலம் தெரியவருகிறது. இதைக் கேட்டு கோபமடையும் கண்ணம்மா உடனடியாக தனது மாமியாருக்கு போன் போட்டு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள்.

இந்த வீடியோவில், கண்ணம்மாவுக்கு இதற்கு முன்பு தலைவலி வந்தது போல மீண்டும் தலைவலி வருகிறது. அப்போது, டாக்டரைப் பார்க்கப் போகிறாள். டாக்டர் அவளுடைய பெயரை கேட்கும்போது, அவள் கண்ணம்மா என்று சொன்னதும், டாக்டருக்கு உடனடியாக நினைவுக்கு வருகிறது. உங்க மாமியர் பேரு சௌந்தரியாதானே, குழந்தைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா என்று கேட்கிறார். இதைக் கேட்டு கண்ணம்மா, எங்க மாமியர் உங்களுக்கு தெரியுமா, குழந்தைகள் எல்லாம்னு கேட்கிறீங்களே எனக்கு ஒரே பொண்ணுதானே பிறந்தது என்று பதில் கேள்வி கேட்கிறாள். அதற்கு டாக்டர், இல்லை உனக்கு ரெட்டை குழந்தைதான் பிறந்திருக்கனும். ஏன்னா, நான்தான் உன் ஸ்கென் ரிப்போர்ட்டை பார்தேன். கண்டிப்பாக உனக்கு ரெட்டை குழந்தைதான் என்று கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மா கோபத்துடனும் கண்ணீருடனும் தனது மாமியர் சௌந்தர்யாவுக்கு போன் செய்கிறாள். அத்தை நான் ஒன்னு கேட்ட பொய் சொல்லா உண்மையை சொல்லனும், எனக்கு ரெட்டை பிறந்துச்சா என்று கேள்வி கேட்கிறாள். இதைக் கேட்டு சௌந்தர்யா ஷாக் ஆகிறார். இந்த புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma latest promo kannamma comes to know she delivered twins girls child

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com