தாலியுடன் வந்து நின்ன கண்ணம்மா.. அசிங்கப்பட்டதால் கல்யாணத்தையே நிறுத்திய செளந்தர்யா!

செளந்தர்யாவின் மூத்த மகள், அழகாக திட்டம் போட்டு வீட்டில் விட்டு வந்த தாலியை கண்ணம்மாவை வைத்தே எடுத்து

Barathi Kannamma promo

Barathi Kannamma promo: விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, இன்று நடக்கப்போவது என்ன என்பது தெரிந்து விட்டது.

Barathi Kannamma promo today: ”கடவுள் இருக்கான் குமாரு மொமண்ட்” தான் இப்போது பாரதி கண்ணமாவில் நடந்துக் கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை, அகிலன் – அஞ்சலி கல்யாணத்திற்கு வரவிட கூடாது என்பதற்காகவே மாமியார் செளந்தர்யா வேண்டுமென்றே அவரை வீட்டிலே விட்டு வருகிறார்.

மண்டபத்திற்கு வந்த பிறகு தான், கண்ணம்மா வரவில்லை என்ற விஷயமே பாரதி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வருகிறது. இந்த நேரத்தில் தான் செளந்தர்யாவின் மூத்த மகள், அழகாக திட்டம் போட வீட்டில் விட்டு வந்த தாலியை கண்ணம்மாவை வைத்தே எடுத்து வர வைக்கிறது. மொத்தத்தில் அஞ்சலி கல்யாணத்திற்காக தாலியுடன் மண்டபத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுகிறார் கண்ணம்மா. இதனால் அசிங்கப்பட்டதாக நினைத்த செளந்தர்யா ஒட்டு மொத்தமாக கல்யாணத்தை நிறுத்துவதாக கூறுகிறார்.

Pandian Stores promo:

பாண்டியன் ஸ்டோரில் இது மீனா வாரம். நல்ல மருமருமகள் என பெயர் எடுத்த மீனாவுக்கு அவரின் குடும்பத்தார் ஸ்கூட்டி வாங்கி கொடுத்தனர். இதை தனது தந்தையிடம் காட்டி அவரை வெறுப்பேற்றி பார்க்க நினைக்கும் மீனா நேராக கிளம்பி செல்கிறார்.

அங்கு போய் தன்னையும், தனது குடும்பத்தாரையும் ஏளனமாக பேசிய அவரை கிழி கிழி கிழிக்கிறார். கொஞ்சம் ஓவரா தான் போறாரோ என்ற எண்ணம் இருந்த போதும், சளைக்காமல் பேசுகிறார் மீனா. அடிதூள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma promo vijay television

Next Story
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் – கஸ்தூரி ஓபன் டாக்!Tamil Nadu News Today Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express