கலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக்; பாரதி கண்ணம்மா சௌந்தர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

ரூபாஸ்ரீ இந்த கலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக் உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாரதி கண்ணம்மா கதாபாத்திரம் சௌந்தர்யா அவருடைய கண்களில் ஒளிர்வதை நீங்களே பாருங்கள்.

barathi kannamma seiral, barathi kannamma seiral actress rupasree soundarya, rupasree celebrates birthday, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா சௌந்தர்யா, பாரதி கண்ணம்மா சௌந்தர்யா பிறந்தநாள் கொண்டாட்டம், ரூபாஸ்ரீ, சௌந்தர்யா ரூபாஸ்ரீ, rupasree birthday photo goes viral, tamil entertainment news, tamil news, barathi kannamma news, tamil tv serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் டாப் 5 சீரியல்களின் பட்டியலில் இடம் பெற்று வருகிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று அதிர்ச்சியும் மிரட்சியும் ஏற்படுகிற அளவுக்கு இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லி வெண்பா துண்பங்களை இழைக்கிறாள். ஆனால், பல பார்வையாளர்கள் இது எனது வாழ்க்கையில் நடந்துள்ளது என்று அந்த சீரியலை நம்பகத் தன்மையை உறுதி செய்கிறார்கள். இதனால்தான் பாரதி கண்ணம்மா தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் படிக்காத ஆனால் தைரியமான அறிவான பெண் கண்ணம்மாவை டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், அவன் மீது ஆசை கொண்ட டாக்டர் வெண்பா சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள். கப்பிணியாக இருந்த கண்ணம்மாவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவளை வீட்டை விட்டு விரட்டுகிறான். முன்கோபியான டாக்டர் பாரதியின் அம்மா சௌந்தர்யா மருமகள் கண்ணம்மாவின் நல்ல எண்ணத்தையும் அவளுடைய நல்ல உள்ளத்தையும் புரிந்துகொண்டவராக இருக்கிறார்.

கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. சௌந்தர்யா அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கே தெரியாமல் எடுத்து வந்து வளர்க்கிறார். கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். எப்படியாவது, தனது மருமகள் கண்ணம்மாவை தனது மகன் பாரதியுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று ஓயாமல் முயற்சி செய்யும் கதாபாத்திரம்தான் சௌந்தர்யா. இதனாலேயே, பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்துக்கு பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் பொறுப்பான அம்மாவாகவும் அன்பான மாமியாராகவும் இருக்கிற்அ சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிகை ரூபாஸ்ரீ நடித்து வருகிறார். நடிகை ரூபாஸ்ரீ தனது உண்மையான பெயரைவிட அவருடைய சீரியல் கதாபாத்திரப் பெயரான சௌந்தர்யா பெயராலேயே அறியப்படுகிறார்.

இந்த சூழலில்தான், நடிகை ரூபாஸ்ரீ தனது பிறந்தநாளை ரொம்ப அழகாகக் கொண்டாடி இருக்கிறார். எப்படி என்றால், கலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். ரூபாஸ்ரீ தனது பிறந்தநாள் கேக் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இது குறித்து ரூபாஸ்ரீ குறிப்பிடுகையில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் அன்புடன் வாழ்த்தியதற்காக அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் !! நீங்கள் அனைவரும் என்னுடைய இந்த நாளை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் ஆக்கியுள்ளீர்கள், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாடிய சௌந்தர்யாவுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரூபாஸ்ரீ இந்த கலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக் உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாரதி கண்ணம்மா கதாபாத்திரம் சௌந்தர்யா அவருடைய கண்களில் ஒளிர்வதை நீங்களே பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma seiral soundarya rupasree celebrates birthdaya photo goes viral

Next Story
ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் : பிக்பாஸ் அர்ச்சனா மகள் கொடுத்த பதில் பாருங்க
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express