New Update
![Barathi Kannamma Serial, Barathi Kannamma, Vijay TV, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா, நடிகர் அகிலன் மாற்றம், நடிகை ஸ்வீட்டி, அஞ்சலி, Barathi Kannamma Serial news, Barathi Kannamma actor Akilan, actor AKilan changed in Barathi Kannamma, Barathi Kannamma Serial](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathi-kannamma.jpg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் எந்த நடிகர் மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் பிப்ரவரி, 2019 முதல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடிக்கிறார்கள். வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினா ஆசாத் நடிக்கிறார். நல்ல குணமுள்ள கண்ணம்மா டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதியின் தோழி வெண்பா, பாரதியை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள். கண்ணம்மாவின் மீது சந்தேகம் அடைந்த பாரதி, அவள நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டை விட்டு துறத்துகிறான். அப்போது, கண்ணம்மா எங்கே செல்வது என்று தெரியாமல் இலக்கில்லாமல் நடந்து செல்கிறாள். கண்ணம்மா நடந்து செல்வது பல எபிசோடுகள் ஒளிபரப்பானது.
இதைப் பார்த்த சீரியல் பார்வையாளர்கள், நெட்டிசன்கள், கண்ணம்மா நடந்து நடந்து நிலாவுக்கு சென்றுவிட்டாள், செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவிட்டாள் என்று மீம்களை வெளியிட கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி-யில் டாப் 5 சீரியல்களின் வரிசையில் இடம்பிடித்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை பெண்குழந்தைகளில் ஒன்றை அவளுடைய மாமியார் தெரியாமல் எடுத்து வந்து ஹேமா என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரே மகள் பிறந்ததாக லட்சுமி என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார். ஹேமா - லட்சுமி இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும்போது தோழியாகிறார்கள். ஹேமா சமையல் அம்மா என்று கண்ணம்மாவிட நெருங்கி பழகுகிறாள். தற்போது, லட்சுமி, கண்ணம்மாவின் மகள் என்று பாரதிக்கு தெரியவருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் சீரியலைப் பார்த்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்த பரீனா கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் சீரியலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளார். அதே நேரத்தில், பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்து வந்த அகிலன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு மனைவியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஸ்வீட்டி இன்ஸ்டாகிராமில் உடன் நடிக்கும் அகீலனை டேக் செய்து இனி இதுபோன்ற எடிட்டை மிஸ் செய்வோம் என்று பதிவிட்டுள்ளார். ஸ்வீட்டியின் பதிவைப் பார்த்த ரசிகர்கள், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் அல்லது ஸ்வீட்டி யாராவது ஒருவர் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் வெளியேறி இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த சீரியலின் புகைப்படத்தில் அகிலனுக்கு பதிலாக புதிததாக வேறு ஒரு நடிகர் நடிக்கும் காட்சி புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதனால், பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு பதிலாக யார் நடிக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் யாருங்க இவரு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.