கண்ணம்மாவுடன் செல்ஃபி எடுத்த பாரதி: கதையா, நிஜமா?

பாரதி கண்ணம்மாவின் செல்ஃபி புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் சேர்ந்துவிட்டீர்களா, இது கதையா, நிஜயாமா என்று கேட்டு வருகின்றனர்.

Barathi Kannamma serial, Barathi Kannamma selfie, பாரதி கண்ணம்மா, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், அருண், ரோஷிணி ஹரிபிரியன், பாரதி கண்ணம்மா செல்ஃபி, vijay tv, Barathi Kannamma, Arun Prasad, Roshni Haripriyan, aurn and roshni selfie, tamil tv serial news, tamil serial news

விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேர்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி வெளியாகி இருக்கிறது. அதனால், இருவரும் நிஜத்தில் சேர்ந்திருக்கிறார்களா இல்லை கதையில் சேர்ந்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பெரிய பலமே சீரியல்கல்தான். பார்வையாளர்கள் மத்தியில் சீரியல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு டிவியிலும் ஒரு கால கட்டத்தில் ஒரு பாப்புலரான சீரியல் ஒளிபரப்பாகும். அந்த வகையில், விஜய் டிவியில் இப்போது பிரபலமான சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல்தான்.

பாரதி கண்ணம்மா சீரியலில், படிக்காத நல்ல குணமுள்ள அறிவுள்ள கண்ணம்மா, டாக்டருக்கு படித்த பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். மகிழ்ச்சியான அவர்களின் குடும்ப வாழ்க்கையில், பாரதியின் தோழி வெண்பா குறுக்கிடுகிறாள். வெண்பா சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள். இது தெரியாத பாரதி, சந்தேகப்பட்டு நிறைமாத கர்ப்பினியான கண்ணம்மாவை வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மா எங்கே செல்வது என்று தெரியாமல் பல எபிசோடுகளாக நடந்து கொண்டே இருந்தபோதுதான் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மீம்களால் பிரபலமானது. டி.ஆர்.பி-யும் எகிறியது. கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தெரியாமல் எடுத்து வந்து ஹேமா என்று பெயர் வைத்து கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா வளர்க்கிறாள். பாரதியும் ஹேமாவை மகளாக பாசம் காட்டுகிறான்.

கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்தது என்று அந்த குழந்தைக்கு சௌந்தர்ய லக்ஷ்மி என்று பெயர்வைத்து வளர்த்து வருகிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதால் நண்பர்கள் ஆகிறார்கள். ஆனாலும், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே முறிந்த உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதனிடையே, கண்ணம்மா தனக்கு ரெட்டை குழந்தை பிறந்தது என்று தெரியவருகிறது. அந்த குழந்தை ஹேமாதான் என்றும் கண்ணம்மாவுக்கு சந்தேகம் வருகிறது. பாரதியின் தம்பி அகிலின் மனைவியும் தனது சித்தி மகளுமான அஞ்சலியின் வளைகாப்புக்கு போகிற கண்ணம்மா அங்கே தனது மாமியார் சௌந்தர்யாவைப் பார்த்து ஹேமா எனது குழந்தைதானே என்று கேட்கிறாள். ஆனால், சௌந்தர்யா, இல்லை என்று பொய் சொல்லி சமாளிக்கிறார். அதற்குள் பாரதி வந்துவிடவே கண்ணம்மா அங்கே இருந்து புறப்படுகிறாள்.

அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சியில் சாப்பாடு பந்தியில், பாரதிக்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து உட்கார வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரம் பார்த்து, கண்ணம்மாவின் எதிரி வெண்பா பந்தியில் எதிரே வந்து அமர்கிறாள். வெண்பாவை வெறுப்பெற்ற வேண்டும் என்று நினைக்கும் கண்ணம்மா பாரதி மீது உரசுவதும் அவனுடன் நெருக்கமாக அமர்வதும் என்று இருக்கிறாள். இதைப்பார்த்து வெண்பாவும் புழுங்குகிறாள்.

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, பாரதி தான்தான் கண்ணம்மாவை தவறாக புரிந்துகொண்டேனா என்று வெண்பாவிடம் சொல்லி வருத்தப்படுகிறான். இதைக்கேட்டு வெண்பா ஷாக் ஆகிறாள். இதனால், பாரதி மனதில் தான்தான் கண்ணம்மாவை தவறாக புரிந்துகொண்டோமோ என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதால் விரைவில் இருவரும் சேர்வார்கள் என்று ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான், பாரதி கண்ணம்ம சீரியலில் பாரதியை நடிக்கிற அருண், கண்ணம்மாவாக நடிக்கிற ரோஷிணி ஹரிபிரியன் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அப்போது சீரியலில் ஒன்று சேர்ந்துவிட்டீர்களா? இல்லை நிஜத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா என்று கேட்டு வருகின்றனர். பாரதி கண்ணம்மாவின் செல்ஃபியைப் பார்த்த ரசிகர்கள் இது கதையா நிஜயாமா என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma serial actors arun and roshni haripriyan selfie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com